சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ‘தொட்டு விடும் தூரம்’! – AanthaiReporter.Com

சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ‘தொட்டு விடும் தூரம்’!

‘தொட்டு விடும் தூரம்’ என்றொரு டைட்டிலில் ஒரு படம் தயாராகி வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் ராஜ் ஹீரோவாக நடிக்க, மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார் கள். நோவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராம்பாதி பாடல்கள் எழுத, வீரசெந்தில் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஆர்.சுரேஷ் இணை தயாரிப்பை மேற்கொண்டிருக்கிறார்.

உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரித்திருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘மைனா’ போன்ற படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் என்று விஜய்-யின் ‘புலி’ படத்தை தயாரித்தவரும், பல சிறு முதலீட்டு படங்கள் வெளியாக உறு துணையாக இருப்பவருமான தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கதை என்னவோ கிராமத்தில் இருந்து காதலியை தேடி வரும் காதலனின் ஒரு காதல் பயணம் சார்ந்ததுதான் என்றாலும்  இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்களாம். கூடவே ‘ பாலசரவணன், சிங்கம்புலி உள்ளிட்ட காமெடி நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும், படத்தில் சமூகத்திற்கு தேவையான, முக்கியமான மெசேஜ் ஒன்றையும் சொல்லியிருக்கிறோம். அது என்ன என்பது தான் படத்தின் சஸ்பென்ஸ்’ என்று சொன்ன இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன், ‘ஹீரோ, ஹீரோயினுக்கான சந்திப்பு, அவர்களது காதல் பயணம் போன்ற விஷயங்கள் நிச்சயம் ரசிகர்களின் இதயங்களை தொட்டு விடும், அதே சமயம் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மெசேஜ் மற்றும் அதை சார்ந்து சொல்லப்பட்டிருக்கும் செண்டிமெண்ட், யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருக்கும்’என்றார்.

இப்படியாப்பட்ட படத்தை தயாரித்திருக்கும் பி.ராமநாதனுக்கு இது தான் முதல் படம். அதிலும் இவர் படம் தயாரித்ததே தனது நண்பருக்காகதானாம். ஆம், இயக்குநர் நாகேஸ்வரனும், தயாரிப் பாளர் ராமநாதனும் பால்ய காலத்திலிருந்து  நண்பர்களாம். பள்ளி முதல் கல்லூரி படிக்கும் போதே நாகேஸ்வரனுக்கு பல வகை யில் உதவி செய்திருக்கும் ராமநாதன், சினிமாவை நேசிக்கும்   நாகேஸ்வரன் அதிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை தயாரித்தாகக் கூறி பெருமைப்பட்டார்.

இதனிடையே இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு அடை யாளத்தை பெற்றுக் கொடுத்த ‘தென்மேற்கு பருவக்காற்று’ உள்ளிட்ட பல சிறு முதலீட்டு படங் களின் ரிலீஸுக்கு பக்கபலமாக இருந்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், இப்படத்தின் வெளியீட்டுக்கு  தன் பங்களிப்பை செய்து வருவதால், படத்தில் நிச்சயம் விஷயம் இருக்கும் என்று தெரிகிறது.

புதிதாக மலர்ந்திருக்கும் 2020 ஆம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமை, ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகும் படம் என்ற பெருமையை பெற்றிருக்கும், ‘தொட்டு விடும் தூரம்’ ரசிகர்களிடம் வரவேற்பு பெறுவதோடு, அவர்களது தூக்கத்தையும் கெடுக்கும் ஒரு படமாக இருக்கும், என்று தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார். மொத்தத்தில் குடும்பத்தோடு பார்க்க கூடிய காதல் படமாக உருவாகியிருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ 2020 ஆம் ஆண்டின் தரமான படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் முதல் படமாக இருக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.