வாட்ஸ் அப்-பில் ஒரு செய்தி முதலில் யாரால் வெளியிடப்பட்டது என்பதைக் கண்டறிய முடியாதா?

வாட்ஸ் அப்-பில் ஒரு செய்தி முதலில் யாரால் வெளியிடப்பட்டது என்பதைக்  கண்டறிய முடியாதா?

தற்போது நம் இந்தியாவில் சுமார் 89 சதவீத மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தாக தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் 1 சதவீத மக்கள் கணினியில் பயன்படுத்துவதாகும் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ‘வாட்ஸ்–அப்’பில் அறிவாற்றலைப் பெருக்க தகவல்கள் பரிமாறும் நல்ல பயன்பாடும் இருக்கிறது. அதே நேரத்தில் பொய்யும், புரட்டும் பரப்பவும், தவறான தகவல் களை பரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் தவறாக அனுப்பப்படும் ‘வாட்ஸ்–அப்’ செய்திகளால் வன்முறையும் வெடிக்கிறது. ஒருவரை இழிவுபடுத்துவதற்காக வேண்டுமென்றே பழிசொற்களை அள்ளிவீசவும் ‘வாட்ஸ்–அப்’ பயன்படுத்தும் சூழலில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ் டேனியல்யிடம் ஒரு செய்தி முதலில் யாரால் வெளியிடப் பட்டது என்பதைக் கண்டுபிடிப்பதற்கான மென்பொருளை உருவாக்க வேண்டும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற இயலாது என்று கிறிஸ் டேனியல்ஸ் இன்று குறிப்பிட்டார்.

ரவிசங்கர் பிரசாத்தும் டேனியல்ஸும் நேற்று சந்தித்த பொழுது வாட்ஸ் அப் மூலம் பொய்ச் செய்தி கள் விரைந்து பரவுகின்றன இதனைத் தடுக்க முதலில் ஒரு செய்தி, எந்த இணையதள முகவரியில் முதலில் வெளியிடப்பட்டது என்பதைக் கண்டறிய உதவும் மென்சாதனம் தேவை என்று ரவிசங்கர் பிரசாத் கோரியிருந்தார். வாட்ஸ்அப் இந்தியாவில் தன் கிளை ஒன்றை அமைத்து அதன் மூலம் சேவையை வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்திய கம்பெனி குறித்த கோரிக்கைக்கு கிறிஸ் டேனியல்ஸ் பதில் ஏதேும் கூறவில்லை. முதலில் செய்தி வெளியிட்டவரைக் கண்டுபிடிக்க உதவும் மென்சாதனத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது சாத்தியம் இல்லை. ஏனெனில் வாட்ஸ்அப்பில் வெளியிடப்படும் செய்திகள் இரு முனைகளிலும் என்கிரிப்ட் செய்யப்பட்டே விநியோகிக்கப்படுகின்றன. இடையில் அவற்றைப் பார்த்து யார் அனுப்பி யது என்று கண்டுபிடிக்க வாய்ப்பில்லை. அவ்வாறு செய்திகளை இடைமறித்து கேட்பது வாட்ஸ் அப் கொள்கை நடைமுறைகளுக்கு எதிரானதாகும் என்று டேனியல்ஸ் கூறினார்.

மேலும் “உலகில் வாட்ஸ் அப்பை 150 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் 20 கோடி பேர் இந்தியாவில் மட்டும் உள்ளனர்.இதில் செய்திகளை அனுப்பும் ஒருவர் தான் அனுப்பிய செய்தி களை கண்டறிய உதவும் புதிய அம்சங்களை விரைவில் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்படும். ஒருவர் எத்தனை பேருக்கு செய்திகளை அனுப்பலாம் என்பதை குறைக்க வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் வாட்ஸ்அப் குழு ஒன்று அமைக்கப்படும். இந்திய நடவடிக்கை களுக்கு பொறுப்பான தலைவர் ஒருவரும் நியமிக்கப்படுவார் என வாட்ஸ்அப் கிறிஸ் தெரிவித்து  உள்ளார்.

கூடவே போலிச் செய்தியை கண்டறிவதற்கு உதவும் கல்வித் திட்டம் ஒன்றையும் நிரந்தரமாக உதவும் நடைமுறைத் திட்டம் ஒன்றையும் வாட்ஸ் அப் அமைக்கும் எனவும் கிறிஸ் டேனியல் கூறினார்.

error: Content is protected !!