திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் பிரம்மோற்சவ விழா நடந்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் போருக்குப் புறப்படும் மன்னர் கள் ஏழுமலையானை வழி பட்டுச் செல்வார்கள். போரில் வெற்றி பெற்றால், ஏழுமலையான் கோயிலுக்கு வந்து விழா நடத்துவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அவ்வாறாக ஓராண்டில் 12 மாதங்களிலும் 12 பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில், முதல் முறையாக 614-ம் ஆண்டு பல்லவ பேரரசின் இராணியாக திகழ்ந்த சாமவாய் பெருந்தேவியார் என்பவர் வெள்ளியால் தயார் செய்யப் பட்ட மணவாள பெருமாள் என்கிற_போக சீனிவாசமூர்த்தி விக்ரகம் ஒன்றை காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த விக்ரகம் தற்போது ஏழுமலையான் கோயிலில் உள்ளது. புரட்டாசி மாதத் தில் பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி கள் தொடங்குவதற்கு முன்பாக போக சீனிவாச மூர்த்தியை கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அதன் பின்னரே பிரம்மோற் சவ விழா நிகழ்ச்சிகள் மற்றும் வாகன சேவைகள் தொடங்கி நடந்துள்ளன.

அதைத் தொடர்ந்து “ஆடித் திருநாள்”, “மாசித் திருநாள்” என்றும் “அச்சுதராய பிரம்மோற்சவம்”என்ற பெயரிலும் விழா நடந்துள்ளன. அதை 1254-ம் ஆண்டு பல்லவ மன்னரான விஜயகண்டா கோபால தேவுடு என்பவர் சித்திரை மாதத்தில் நடத்தி உள்ளார். 1328-ம் ஆண்டு ஆடி மாதத்தில் ஆடி திருநாள் என்ற பெயரில் திருபுவன சக்கரவர்த்தி, திருவேங்கடநாத யாதவ ராயலு காலத்தில் பிரம்மோற்சவ விழா நடந்துள்ளது.

1429-ம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் மன்னர் வீரபிரதாப ராயலு காலத்தில் பிரம்மோற்சவ விழா நடந்துள்ளது. 1446-ம் ஆண்டு மாசி திருநாள் என்ற பெயரில் மன்னர் ஹரிஹரராயலு பிரம்மோற்சவ விழாவை நடத்தி உள்ளார். 1530-ம் ஆண்டு அச்சுதராய பிரம்மோற்சவத்தை அச்சுதராயலு என்ற மன்னர் நடத்தி உள்ளார். 1583-ம் ஆண்டில் 12 மாதங்களிலும் 12 பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளன.

அந்த வகையில்திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்கள் நடைபெறும். இவ்விழாவானது அக்டோபர் 8-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

இந்த நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மிகச் சிறச்ப்பாக தேவஸ்தானம் செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள்

செப்.30 – மாலை கொடியேற்றம்

அக்.1 – காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச வாகனத்திலும் உலா

அக்.2 – காலை சிம்ம வாகனம், இரவு முத்துபல்லக்கு வாகனம்

அக்.3 – காலை கற்பகவிருட்ச வாகனம், இரவு சர்வபூபாள வாகனம்

அக்.4 – காலை மோகினி அவதாரம், இரவு கருட வாகனம்

அக்.5 – காலை அனுமன் வாகனம், மாலை தங்கரதம், இரவு யானை வாகனம்

அக்.6 – காலை சூரியபிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம்

அக்.7 – காலை தேரோட்டம், இரவு குதிரை வாகனம்

அக்.8 – காலை சக்ரஸ்நானம், மாலை கொடியிறக்கம் நிகழ்ச்சி

Related Posts

error: Content is protected !!