அந்த கால வாழ்க்கையை விரும்பும் இந்தியர்கள் எண்ணிக்கை ஜாஸ்தி!!

அந்த கால வாழ்க்கையை விரும்பும் இந்தியர்கள் எண்ணிக்கை ஜாஸ்தி!!

நம் பாளிப்படிப்பில் ஆரம்பம் தொடங்கி ஹைஸ்கூல் படிப்பை முடிக்கும்வரை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரலாறு என்று ஒரு பாடம் உண்டு. அதில் இந்திய வரலாறு பற்றி கூறப்பட்டு இருப்பது ஒரே மாதிரியான பல்லவியாக இருக்கும். ஆதி காலத்தில், எந்தெந்த ஆண்டுகளில் இந்தியா மீது யார், யார் படையெடுத்து வந்தார்கள்? அந்த அன்னிய நாட்டு மன்னர்களின் விவரங்கள், பின்னர் இந்தியாவின் பல பகுதிகளையும் ஆண்ட மன்னர்கள் ஒருவருக்கொருவர் எந்த இடத்தில் எதற்காக மோதிக்கொண்டார்கள்? அசோகர் சாலைகளில் மரம் நட்டார் என்பது போன்ற தகவல்கள் ஆண்டு வாரியாக சிரத்தையுடன் தயாரித்து கொடுக்கப்பட்டு இருக்கும். அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா மீது நடந்த முகலாயர்களின் படையெடுப்பு, தொடர்ந்து பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பு, ஆங்கில ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தது, சுதந்திர போராட்டம், பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றது, தற்போது ஆட்சியில் இருப்பது யார் என்ற ரீதியில் தான் இந்தியாவின் வரலாறு பள்ளிகளில் போதிக்கப்படுகிறது.

தென் இந்திய வரலாற்றைப் பொறுத்த அளவில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டது மற்றும் ஆங்காங்கே இருந்த குறுநில மன்னர்களின் ஆட்சி விவரங்கள் தான் அதிகம் இடம்பெற்று இருக்கும்.இளவயதில் திணிக்கப்படும் இந்த வரலாற்று விவரங்கள் பல முக்கிய நிகழ்வுகளை திரைபோட்டு மறைத்து விடுகிறது.ஒரு நாட்டின் வரலாறு என்பது போர்க்களங்களுடன் நின்றுவிடுவது இல்லை.

ஆதி காலத்தில் இந்தியாவில் இருந்த மக்கள் எப்படிப்பட்ட நாகரிகம் கொண்டு இருந்தார்கள்? அதன் பரிணாம வளர்ச்சி என்ன? கல்வி கற்கும் முறையை கையாண்டது எவ்வாறு? வெளிநாட்டினரும் வியந்து போற்றும்படியான அந்த கால இந்தியர்களின் விஞ்ஞான அறிவு எப்படி இருந்தது? அப்போது வாழ்ந்த அறிஞர்கள் யார், யார்? காலத்தை விஞ்சி நிற்கும் கல்லணை, தஞ்சை பெரியகோவில் போன்ற பிரமாண்ட படைப்புகளின் நுணுக்கம் என்ன? தேர்தல் என்ற அமைப்புக்கு உலகிலேயே முதன் முறையாக வித்திட்ட தமிழக மன்னர் யார், இன்றளவும் போற்றி வியக்கத்தக்க காவியங்களை பழங்கால அறிஞர்கள் இயற்றியது எவ்வாறு? அச்சில் இல்லாத அவை பல ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி இன்னும் புதுக் கருக்கு குலையாமல் அப்படியே வழக்கத்தில் இருக்கும் அதிசயம் என்ன? என்பது போன்ற உண்மையான தகவல்கள் எல்லாம் நமது பொதுவான சரித்திர புத்தகத்தில் இருக்காது அதை அறிந்து என்ன பயன் என்று பலரும் நினைப்பதும் இதற்குக் காரணம் என்பதை மறுப்பதிற்கில்லை..

ஆனாலும் சகலரும் தெரிந்து கொள வேண்டிய விஷயங்கள் சில உணடு. அதில் சில இதோ:

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் மட்டும் சுமார் 5 கோடி பேர் மனச்சோர்வு என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறது. இது நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் ஆகும். மேலும் 69 சதவிகித இந்தியர்கள் தற்போது வாழும் வாழ்க்கை முறையை விட 50 ஆண்டுக்கு முன்பு இருந்த வாழ்க்கை முறையை விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா வாஷிங்டனை சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம், இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு 38 நாடுகளிலுள்ள 40,000 மக்களிடம் நடத்தப்பட்டது. அதில், 69 சதவிகித இந்தியர்கள் 50 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை விரும்புகின்றனர். அதேமாதிரி, இந்தியா போன்ற பல நாடுகள் 1960களின் பிற்பகுதி முதல் வியத்தகு பொருளாதார மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 41 சதவிகித அமெரிக்கர்கள் இன்றைய வாழ்க்கை மோசமாக உள்ளது என்றும்,37 சதவிகித பேர் சிறந்தது என்றும் கூறுகின்றனர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போதுள்ள வாழ்க்கை முறையைச் சிறந்தது என்று வியட்நாம்மை சேர்ந்த 88 சதவிகித பேரும், தென் கொரியாவை சேர்ந்த 68 சதவிகித பேரும் கூறுகின்றனர். துருக்கியில் 65 சதவிகித பேர் கடந்த ஐந்து பத்தாண்டுகளாக அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஜப்பான் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த 65 சதவிகித பேரும், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 64 சதவிகித பேரும் இந்த வாழ்க்கை முறையைச் சிறந்தது என்று கூறுகின்றனர்.

இத்தாலியில் 50 சதவிகித பேரும்,நைஜீரியாவில் 54 சதவிகித பேரும், கென்யாவில் 53 சதவிகித பேரும், கிரேக்கத்தில் 53 சதவிகித பேரும் இன்றைய வாழ்க்கை முறை மிக மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளனர் எனது குறிப்பிடத்தக்கது..

Related Posts

error: Content is protected !!