பூவுலகின் சொர்க்கமான காஷ்மீரில் தொடரும் சிறுமி(கள்) படுகொலை!

பூவுலகின் சொர்க்கமான காஷ்மீரில் தொடரும் சிறுமி(கள்) படுகொலை!

பூவுலகின் சொர்க்கம் என்றைழைக்கப்படும் காஷ்மீர் புராண காலம் தொட்டு  பாரதத்துடன் இணைந்திருக்கும் பகுதியாகும் . காஷ்யப முனிவரால் உருவாக்கப்பட்ட சமவெளிப்பகுதி தான் காஷ்மீர் .ஹிந்துக்கள் புனிதமாக கருதும் கைலாயம், மான சரோவர் ஏறி உற்பத்தியாகும் இடமும் அங்கு தான் உள்ளது . பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக ஹிந்துக்கள் அந்த அழகிய பனிமலை மீது குடிகொண்டிருக்கும் சிவபெருமானை தரிசனம்செய்வதற்காக காஷ்மீருக்கு கைலாய யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். மாதா வைஷ்ணவிதேவி இருந்து வருகிற இடம். பகவான் அமர் நாத் பக்தர்களுக்கு அருள்பாவித்து வருகிற இடம் காஷ்மீர். சூரியபகவானுக்கு மார்த்தாண்டன் எனும் பெயர் உண்டு. காஷ்மீரில் மார்த்தாண்டகோயில் இருந்து வந்துள்ளது. தற்போது அது பாழடைந்து சிதைந்து இருக்கிறது. கல்ஹனர் காஷ்மீர் சரித்திரத்தை விவரிக்கும் ராஜதரங்கிணி என்ற நூலை இந்த மார்த்தாண்ட ஆலயத்திலிருந்து கொண்டு தான் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இமயமலையே ஹிந்துக்களுக்குப் புனிதமாகும். ஹிந்துக்கள் இப்பூமியை வெறும் மண்ணாக மலையாக நீராக மட்டும் பார்ப்பதில்லை. இங்கு எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பது என்பது பாரதப் பண்பாடாகும். மலை புனிதம், நதி புனிதம், கடல் புனிதம், பூமியை பூ, மாதா, என்று அழைக்கின்ற உயர்ந்த பண்பாடு பாரதப் பண்பாடாகும். அம்மாதிரிதான் முழு இமயமும் ஹிந்துக்களுக்கு புனிதமாகும். காலம் காலமாக அங்கு ஹிந்து மன்னர்களின் ஆட்சிதான் நடந்து வந்திருக்கிறது. பௌத்த விஹாரங்கள் அதிகமாக இங்கு இருந்து வருகின்றது. பௌத்தர்களுக்கும் இமயம் புனிதமாகும். ஆனால் அந்த புண்ணிய பூமியில் சமீபகாலமாக நடக்கும் விஷய்ங்கள் எதுவும் சரியில்லை. இந்த ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதைக் கண்டித்து டெல்லியிலும் மற்ற நகரங்களிலும் மெழுகு வர்த்தி ஏந்தி மக்கள் மவுன போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அதே  காஷ்மீரில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ளார். ஜம்மு மாவட்டத்தில் சவுக்கி சவுல்ரா போலீஸ் நிலையத்தில் கடந்த 10-ந்தேதி தனது மகளை காணவில்லை என்று அச்சிறுமியின் தந்தை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 3 நாட்களாக தேடிவந்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து சுமார் 70 மீட்டர் தொலைவில் ஒரு புதரில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. இறந்த சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தந்தை கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

காஷ்மீரில் கதுவா பகுதியில் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமி ஆசிஃபாவின் பெயரை தனது 2 மாத குழந்தைக்கு கேரள பத்திரிகையாளர் ஒருவர் சூட்டியுள்ளார்.

காஷ்மீரில் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது முஸ்லிம் சிறுமி ஆசிஃபா கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ‘மாத்ரூபூமி’ நாளேட்டில் உதவிஆசிரியராகப் பணியாற்றும் ரஞ்சித் ராம் என்பவர் தனது 2 மாத மகளுக்கு ஆசிஃபா ராஜ் என்று பெயர் சூட்டியுள்ளார். .

இது குறித்து ரஞ்சித் ராம் கூறுகையில், ”என்னுடைய 2-வது மகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று இணையதளத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா காட்டுமிராண்டித்தனமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். என்னுடைய முதல் குழந்தைக்கு 7 வயதாகிறது. என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது என ஒரு நிமிடம் சிந்தித்தேன்.

2 பெண் குழந்தைகள் வைத்திருக்கும் எனக்கு இந்த சம்பவம் நிம்மதி இழக்கச் செய்தது. இதனால், கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பிறந்த எனது 2-வது குழந்தைக்கு ஆசிஃபாவின் நினைவாக, ஆசிஃபா ராஜ் என்று பெயர் வைக்க முடிவு செய்தேன். மதத்தையும், சாதியையும் நான் இந்தப் பெயரில் பார்க்கவில்லை, மனிதநேயத்தை மட்டுமே பார்த்து இந்தப் பெயரை என் குழந்தைக்கு சூட்டினேன். என் மனைவி சந்தியாவிடம் இது குறித்து தெரிவித்தேன். அவரும் சம்மதித்தார். அதன்பின், என் விருப்பத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் ராஜ் தனது ஃபேஸ்புக்கில் ஆசிஃபாவின் பெயரை தனது குழந்தைக்கு வைத்திருக்கிறேன் என்று பதிவிட்ட பின், அந்தக் கருத்துக்கு ஆதரவாக பல ஆயிரம் பேர் லைக் செஞ்சு, எக்கச்சக்கமானோர் அதை ஷேர் செஞ்சிருக்காங்க.

error: Content is protected !!