சந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்!.

சந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்!.

உலக நாடுகள் பலவ்ற்றின் கவனத்தைப் பிடித்த சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் -1 விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் உள்ள சுற்றுச் சூழல், கனிமங்கள் இருப்பதை கண்டறிந்தது.

இதையடுத்து நிலவில் தென்துருவப் பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் சந்திர யான்-2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து வந்தனர். இதற்கான பணிகளானது கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வந்தது.

கடந்த 15ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராக இருந்தனர். ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு 54 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்த போது ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட் டவுன் நிறுத்திவைக்கப்பட்டது.

ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி நிறைவடைந்தது.

நாளை பிற்பகல் (22-1-2019) 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் இன்று மாலை 6:43க்கு தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது, சந்திரயான் 2 விண்கலத்தின் பயண நாட்கள் 45 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க்து.

error: Content is protected !!