இந்தியாவின் முதல் crow funded ( குழு முதலீடு ) & crow sourced அனிமேஷன் திரைப்படம் – புண்ணியகோடி-

இந்தியாவின் முதல் crow funded ( குழு முதலீடு ) &  crow sourced அனிமேஷன் திரைப்படம் – புண்ணியகோடி-

புண்ணியகோடி இந்தியாவின் முதல் crow funded ( குழு முதலீடு ) மற்றும் crow sourced அனிமேஷன் திரைப்படமாகும். புண்ணிய கோடி கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமிய பாடலை பற்றிய படமாகும். . இப்படம் மனிதன் மற்றும் மிருகங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை பொழுது போக்கு ரீதியிலான விஷயங்களோடு சேர்த்து நல்ல கருத்தை கூறும் புதுமையான ஒரு படைப்பாக இருக்கும். இப்படத்தின் கதைக்களம் காவேரி நதியின் கரையில் உள்ள கருநாடு என்னும் இடத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம் பெறும் ஒரிஜினல் கிராமிய பாடல் மகாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

punyakodi au 4

கதை : கருநாடு என்னும் கிராமத்தில் எப்போதும் உண்மையை மட்டும் உரைத்து வாழும் ஒரு மாட்டை பற்றியதாகும். ஒரு நாள் புண்ணியகோடி எனப்படும் அந்த மாட்டை ஒரு புலி அடித்துவிடுகிறது. அப்போது புண்ணிய கோடி என்னும் அந்து பசு புலியிடம் நான் என் கன்றை பசியாற்ற வேண்டும் ஆதலால் தாங்கள் என்னை விடுவிக்க வேண்டும் என் கன்றை பசியாற்றிய பிறகு நான் மீண்டும் திரும்பி வருகிறேன் என்று கேட்கிறது. பிறகு புண்ணிய கோடி தன் கன்று பசியாறிய பின்பு மீண்டும் புலியிடம் செல்கிறது. புண்ணியகோடியின் தைரியம் மற்றும் நல் உள்ளத்தை கண்டு அந்த புலி இனி புண்ணிய கோடியையோ அல்லது மற்ற பசுக்கலையோ தான் துன்புறுத்துவதில்லை என்று வாக்கு கொடுக்கிறது.

இப்படத்தில் புகழ் பெற்ற பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர். படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா , நடிகை மற்றும் இயக்குநர் ரேவதி இப்படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் புண்ணிய கோடி கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசுகிறார். இது தவிர யு- டர்ன் படத்தில் நடித்த ரோஜர் நாராயணன் மற்றும் கன்னட மேதை நரசிம்மமுர்த்தி ஆகியோரும் இப்படத்திற்கு டப்பிங் பேசுகிறார்கள்.

வி. ரவி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இவர் மல்டி மீடியா மற்றும் அனிமேஷன் துறையில் சிறுவர்களுக்கான படங்களை உருவாக்குவதில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இவர் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இப்படத்தின் இயக்குநர் ரவி தன்னுடைய முயற்சியால் பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற பற்பல தொழில்நுட்ப கலைஞர்கலைகளை இந்தோ – ஜெர்மன் மொழிகளின் தாயாகிய சமஸ்கிருத மொழியில் உருவாகும் இப்படத்தில் ஒருங்கிணைத்துள்ளார்.

படத்தை பற்றி புண்ணிய கோடி திரைப்படத்தின் இயக்குநர் ரவி ஷங்கர், “தி லேஜென்ட் ஆப் புண்ணிய கோடி திரைப்படம் தைரியம் மற்றும் உண்மையாக இருத்தல் பற்றி பேசும் ஒரு படைப்பாகும். இப்படத்தில் உள்ள கருத்து இக்கால மக்கள் மற்றும் வருங்கால மக்கள் ஆகியோருக்கு பயனுள்ளதாக அமையும் ஒரு கருத்தாகும். சமஸ்கிருதம் நம்முடைய மொழிகளின் வேர்களாகும் , இது 5௦௦௦ வருடம் பழமையான மொழியாகும். அதை அழியாமல் பாதுகாக்கும் பனி நம்முடையது. இப்படத்தின் வெற்றி மேலும் பலர் சுதந்திரமாக இதை போன்ற ஒரு முறையில் படங்களை உருவாக்க வாய்ப்பாக அமையும் என்றார்.

error: Content is protected !!