கூகுள் அறிமுகப்படுத்தும் “டி ஈ இசட்” பேமென்ட் சர்வீஸ் கேட்வே.! – AanthaiReporter.Com

கூகுள் அறிமுகப்படுத்தும் “டி ஈ இசட்” பேமென்ட் சர்வீஸ் கேட்வே.!

இன்று முதல் கூகுள் Tez என்னும் பேமென்ட் கேட்வேயை ஆப்ஸ் அல்லது மற்ற ஆன்லைன் மூலமாகவோ பயன்படுத்த முடியும். இந்த பேமென்ட் கேட்வே சர்வீஸை ரிஸர்வ் வங்கி அங்கீகரித்துள்ளது என்பது அடிசினல் தகவல். அத்துடன் இது ஹெச்டிஎஃப்சி / பாரத ஸ்டேட் வங்கி / ஐசிஐசிஐ போன்ற பல வங்கிகள் இணைப்பை செய்துள்ளன. மேலும் அரசாங்கத்தின் யூபிஐ என்னும் UPI (Unified Payments Interface) இதில் இணைந்துள்ளதால் தினமும் 1 லட்சம் விகிதம் பணம் அனுப்ப / பொருட்கள் வாங்க / சேவைக்கு பே செய்ய முடியும்.

இந்த செயலி மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இது Paytm செயலியைப் போல வாலட்டில் உள்ள பணத்தை பரிமாற்றம் செய்யாமல், நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்கிறது.  டாமினஸ், ரெட்பஸ், ஜெட் ஏர்வேஸ் போன்றவை இதன் ஆன்லைன் பங்குதாரர்களாம்.

ஆனாலும் இதன் மூலம் பே டி எம் பகல் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழும் சான்ஸ் அதிகம் . இந்த சேவை தமிழ் உட்பட English, Hindi, Bengali, Gujarati, Kannada, Marathi,and Telugu மொழிகளிலும் செயல்படும் என்பது விசேஷம்.

https://tez.google.com/business/ என்னும் இந்த லின்க்கை உபயோகபடுத்தி நீங்கள் உங்கள் பிஸினஸை ரிஜிஸ்டர் செய்தால் நீங்களும் இந்த புது வகை பேமென்ட் சிஸ்டம் மூலம் பணம் பெற இயலும