தெலுங்கானா பெண் மருத்துவர் படுகொலை; குற்றவாளிகளை அடித்துக் கொல்லவேண்டும்! -வலுக்கும் குரல்கள்1 – AanthaiReporter.Com

தெலுங்கானா பெண் மருத்துவர் படுகொலை; குற்றவாளிகளை அடித்துக் கொல்லவேண்டும்! -வலுக்கும் குரல்கள்1

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா ரெட்டி, வயது 25, கடந்த 27ஆம் தேதி அவசர பணி நிமித்தமாக மாதாப்பூர் கால்நடை மருத்துவமனைக்கு பணிக்குச் சென்றுள்ளார். ஐதராபாத்தில் சம்சாபாத் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 2 சக்கர வாகனத்தில் சென்றவர், வழியில் ஒரு சுங்க சாவடி அருகே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து கால்டாக்சியில் பணிக்குச் சென்றுள்ளார். இரவு 9 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்புவதற்காக 2 சக்கர வாகனத்தை எடுக்க சுங்க சாவ டிக்குச் சென்றபோது அவரது இரு சக்கர வாகனம் பஞ்சராகி நிற்பதைக்கண்டார். அப்போது அவருக்கு உதவ வந்த நால்வர் பாலியல் வன்கொடுமை செய்து அவரை எரித்து விட்டனர். மறுநாள் ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ் சாலை யில் உள்ள சாத்நகரில் ஒரு பாலத்தின் அடியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாரி டிரைவர்கள் முகமத் ஆரிப், சென்னகேசவ் மற்றும் கிளீனர்கள் ‘ஜொள்ளு’ சிவா, ‘ஜொள்ளு’ நவீன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரி யங்கா ரெட்டியை அவர்கள் தூக்கிச் சென்று கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்து பின்பு உடலை எரித்து விட்டது தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் ஞாயிற்றுக் கிழமை அன்று குற்றம் நடந்த இடத்திற்கு நால்வரில் இருவர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது .ஷாம்ஷாபாத்-சாத்நகர் இடையே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாலத்திற்கு அடியில் பிரியங்கா ரெட்டி எரிக்கப்பட்ட இடத்தில் நடந்தவற்றை ‘ஜொள்ளு’ சிவா, ‘ஜொள்ளு’ நவீன் ஆகியோர் விவரித்தனர். சம்பவத்தன்று பிரியங்கா ரெட்டியின் ஸ்கூட்டரை இருவர் ஓட்டிச் செல்ல, இருவர் டிரக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அந்த டிரக்கில் பிரியங்கா ரெட்டியின் சடலம் ஏற்றப்பட்டிருந்தது.நெடுஞ்சாலையில் பாலத்துக்கு அடியிலிருந்த இடத்துக்கு வந்ததும் நால்வரும் பிரியங்கா ரெட்டியின் உடலைக் கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட நால்வரும் எரித்துக் கொல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் ஜெயா பச்சன், பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்டவர்களை அடித்தே கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். “இப்படிச் சொல்வது கொடூரமாக இருக்கலாம். ஆனால் இத்தகையோரை மக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்லப் பட வேண்டும்,” என்றார்.

கட்சி பாகுபாடின்றி மற்ற உறுப்பினர்களும் தெலுங்கானா பெண் எரித்துக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலயில் ஷாத்நகா் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த நால்வரையும் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்துவதாக இருந்தது. எனினும், அந்தக் காவல் நிலையம் முன் பொதுமக்கள் பெருந் திரளாகக் கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மாவட்ட ஆட்சியா் ஷாத்நகா் காவல் நிலையத்துக்கு வந்து, நால்வருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பித்தாா். பின்னா் 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் சிறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

முன்னதாக அவா்களை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, பொதுமக்கள் அவா்களுக்கு எதிராக ஆவேசத்துடன் கோஷமிட்டனா். சிலா் கல்வீச்சில் ஈடுபட்டதால், லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று ஹைதராபாத் வழக்குரைஞா்கள் முடிவு செய்துள்ளனா்.