எத்தனை டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி வாங்கியவை? : ஐகோர்ட் கேள்வி – AanthaiReporter.Com

எத்தனை டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி வாங்கியவை? : ஐகோர்ட் கேள்வி

தமிழக அரசாங்கத்தின் மெயின் வருவாய் துறையான டாஸ்மாக் கடைகளில் எம் ஆர் பி -யை விட கூடுதல் விலை கொடுத்து சரக்கு வாங்கி அதை நிம்மதியாக குடிக்க டாஸ்மாக் எந்த “பார்’ களிலா வது போதுமான வசதி இருக்கிறதா? உள்ளே நுழைந்தவுடன் குடிக்கும் முன்பே குமட்டி வாந்தி எடுக்கும் நிலையில்தான் டாஸ்மாக் பார்கள் உள்ளன. அடிப்படை வசதி இல்லாமல், எந்தவித வரைமுறையும் இல்லாமல், பார் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. அங்கு விற்கப்படும் பொருட்கள், வெளியில் உள்ள கடைகளின் விலையை விட மூன்று அல்லது நான்கு மடங்கு கூடுதலாக உள்ளதுடன் பார்களில் பணி புரிவோர் யாரும் ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் சான்றிதழ் வாங்காத நோயாளிகள் என்பதுதான் உண்மை. இதை அரசு கண்டு கொள்ளாமல் கல்லா கட்டி வரும் சூழ் நிலையில் தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்புத்துறை அனுமதியுடன் செயல்படுகின்றன என ஐகோர்ட் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் 4,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுடன் ஒட்டிய 2,700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது.இந்த பார்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு பார் உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதிகாரிகளின் கடுமையான சோதனையை அடுத்து தற்போது அனைத்து டாஸ்மாக் பார்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழக அரசு விதித்த தடையால் அனைத்து டாஸ்மாக் பார்களிலும் 50 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாக பார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதேபோல், வருமானம் குறைந்துள்ளதால் பார் உரிமத்தொகையை 1.5 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் பார் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே சேலம் மாவட்டம் வனவாசி மதுக்கடை அப்பகுதி மக்கள், பள்ளிகளுக்கு தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக புகார் எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து ஜெயக்குமார் என்பவர் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் டாஸ்மார்க் கடைகளிகள் விற்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளனவா? என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த விசாரனை நியமிக்கலாமா என்ற கேள்வியும் முன்வைத்தனர். மேலும் இது தொடர்பாக டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனர் அனுமதியுடன் செயல்படும் பார்களின் எண்ணிக்கை எத்தனை உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று முறையாக இயங்கி வருகிறது?, அதனுடைய செயல்பாடுகள் குறித்து ஒரு விரிவான ஒரு அறிக்கையை டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனர் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.