தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம் =சக்சஸ்

தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம் =சக்சஸ்

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ‘ஸ்பெஷல் 26’. அப்படத்தின் மெயின்  காட்சிகளை ஒஞ்சூண்டு லவட்டி எடுத்த படத்தில்தான் சூர்யாவை வைத்து  தானா சேர்ந்த கூட்டம் என்ற டைட்டிலில்  எடுத்துள்ளார்கள். . சிபிஐ அதிகாரியாகியே தீர வேண்டும் என்று லட்சியமாகக் கொண்ட சூர்யா. அவரின் பக்கத்து வீட்டு இளைஞன் கலையரசன் போலீசில் சேர ஆசை.. இருவருக்கும் அதற்கான தகுதி இருக்கிறது. ஆனால், சிபிஐ உயரதிகாரியான சுரேஷ்மேனன் தன் சொந்த காரணத்துக்காக சூர்யா-வை வெறுப்பேற்றி ரிஜக்ட் செய்து விடுகிறார். அதே சமயம் போலீஸ் வேலை கேட்கும் கலையரசனிடம் லஞ்சம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று சொன்னதில் அப்செட்டாகி சூசைட் செய்து கொள்கிறார். இதனால் அரசு வேலைக்கு திறமையை விட பணம்தான் ரொம்ப முக்கியம் என்று  உணர்ந்து தானே ஒரு கூட்டத்தைச் சேர்த்து சிபிஐ என்ற பெயரால் ’ரெய்டு’ என்ற பெயரில் கொள்ளை அடிக்கி றார். கூடவே கீர்த்தியை காதலிக்கிறார்.. இடையிடையே கோபமாக கெட்ட வார்த்தைகளுடன் வீர வசனம் பேசுகிறார்.. ஹூம்.. ஒரு ஹிந்திப் படத்தின் ரியல் ஹீரோவாக இருந்த கதையை சுட்டு  சூர்யா-வுக்காக கண்டபடி மாற்றி  தமிழிலும்  சூப்பர் ஹிட் அடிக்க வேண்டிய படத்தை கோட்டை விட்டு விட்டார் இயக்குநர் என்றும் சொல்லலாம்.

ஆனாலும் இன்றளவும் மாபெரும் பிரச்சினையாக இருக்கும் வேலை வாய்ப்பு, லஞ்சம், போன்ற புரையோட்டிப் போனவற்றை இயக்குநர் கொஞ்சம் டீடெய்லாகவே, விவரித்து தனிக் கவனம் பெறுகிறார் . டைட்டில் போடும் போதே தான் எடுத்துக் கொண்ட சமாச்சாரம் என்ன? எதை நோக்கி தன் பயணம் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்துவதில் விக்னேஷ் சிவன் சக்சஸ்  அடைந்து விட்டார். அத்துடன் அந்த பாலிவுட் படத்தை பார்த்த, பார்க்காத சகலரையும் மட்டுமின்றி ஹீரோ சூர்யாயிசத்தையும், அவரின் தனி ரசிகர் கூட்டத்தயும் திருப்திப் படுத்தும் விதத்தில் ஒரு ரியல் எண்டர்டெயினிங் படத்தை கொடுத்து ஓகே சொல்ல வைத்து விட்டார் என்றும் சொல்லலாம்.

மேலும் கொஞ்ச காலமாக சில பல படங்களில் விட்டேத்தியாக வந்து போய் கொண்டிருந்த சூர்யாவுக்கு, சகல ஏஜ் குரூப்-பினர்களும் ரசிக்கும்படியான ரோலை கொடுத்த விக்னேஷ் சிவனை எம்ம்புட்டோ பாராட்டலாம். ஒவ்வொரு காட்சியிலும் யூத் & அட்ராக்டிவாக தோன்றி நடித்தும் அசத்தி இருக்கிறார் சூர்யா. ஆனால் அவரை வைத்து கோபமாக மூஞ்சியை வைத்து கொண்டு கெட்ட வார்த்தைகளையெல்லாம் பேச வைத்து விட்டு, உடனிருப்பவர், ‘சார்.. நீங்களா.. இப்படி? ‘ என்று கேட்பதெல்லாம் ஓவர்.

நாயகி கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் – அவ்வளவே; அழகாக வருகிறார் – வெடுக்-வெடுக் என்று பேசுகிறார். பாடல்களில் தன்னால் முடிந்த அளவு ஆடி செல்கிறார், தட்ஸ் ஆல்! கூடவே சீனியர் ஆர்டிஸ்ட் செந்தில் ம்ற்றும் ‘நவரச நாயகன்’ கார்த்திக் ஆகிரோர் கூட படத்தில் இருக்கிறார்கள். ஆனால் மற்ரோரு சீனியர் ஆர்டிஸ்டான ரம்யா கிருஷ்ணனுக்கு மட்டும் பாந்தமான கேரக்டர்.. தன் குழந்தைகளை அறிமுகப்படுத்தும் போது, ‘வளர்மதி, வட்டமதி, வண்ணமதி’என்று தனது குழந்தைகளோட பெயர் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்து ஒரு குழந்தையைப் பார்த்து பாதியில் மறந்தது போல், ‘அய்யோ.. இவளுக்கு என்னமோ பேரு வெச்சேனே’ என யோசித்து விட்டு, ‘அழகுமதி’ என்று சொல்லும் அழகும், ‘ஹூம்.. அழகு மீனான்னு சொல்றதுக்கும், ஜான்சி ராணி CBIன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல’ என வெரைட்டியான ஏற்ற இறக்கத்தில் பேசும் ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களின் கைத்தட்டலை அவ்வப்போது பெறுகிறார். மேலும் 80களில் நடக்கும் இப்படத்தின் வசனங்களில் கரண்ட் டாபிக்கான ‘சசிகலா’, நீட் எக்ஸாம் வரை தொட்டிருப்பதெல்லாம் உறுத்தாமல் ரசிக்கும்படி அமைத்திருப்பது ஓ.கே.ரகம்தான்.

இளமைகாரன் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரனான அனிருத் இசையில் முன்னரே வெளியான பாடல்கள் அத்தனையும் ஏற்கனவே படு ஹிட் ஆகி இருந்ததும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக ஒருவரின் பணியை ஸ்பெஷலாக குறிப்பிட்டே ஆக வேண்டும் -கலை இயக்கநர் கிரண் & டீம் ஒர்க் எக்ஸ்டாரனரி.80ம் வருஷத்திய வீடுகள், பெல்பாட்டம் டிரஸ், சுவர் விளம்பரம், ஒவ்வொன்றிலும் மெனக்கெட்டு பிரமிக்க வைக்கிறார்கள். வேலைக்காரன் செட் போல் இப்படத்தின் ஆர்ட் ஒர்க்-கையும் கண்காட்சியாக வைத்தால் இருபது வயசுக்குட்பட்ட பசங்களுக்கு அந்த கால மெட்ராஸை தெளிவுப்படுத்த வசதியாக இருக்கும். தினேஷ் கிருஷ்ணனின் கலரான கேமரா கலக்கல். மொத்தத்தில் நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக செய்துள்ள இச்சினிமாவில் கொஞ்சம் கழிவு,சேதாரம் எல்லாம் இருக்கிறதுதான்..ஆனாலும் இந்த பொங்கலுக்கு ஃபேமிலியோடு பார்த்து ரசிக்கத்தக்க படம்தான் – தானா சேர்ந்த கூட்டம்.

மார்க் 5 / 3.25

error: Content is protected !!