தமிழக வாக்காளர் பட்டியல் – லேட்டஸ்ட் ரிலீஸ் = இப்போதும் சேர்க்கலாம், முகவரி மாற்றலாம்!

தமிழக வாக்காளர் பட்டியல் – லேட்டஸ்ட்  ரிலீஸ் = இப்போதும் சேர்க்கலாம், முகவரி மாற்றலாம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக் கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் இது தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் இன்னமும் இறுதி வாக்காளர் பட்டியலை தயார் செய்து வெளியிட வில்லை. இறுதி வாக்காளர் பட்டியல் தயாராகாததால் எங்களால் மாநகராட்சி, நகராட்சி  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்க முடியவில்லை என நேற்று மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்த நிலையில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி தமிழகத்தில் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,02,54,172 பேரும், பெண் வாக்காளர்கள் 3,10,45,969 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 6,474 பேர் உள்ளனர்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 317 வாக்காளர்களும்

குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை- துறைமுகம் தொகுதி ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளர்களுடன் உள்ளது.

16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின்போது, 18, 19 வயதுடையவர்கள் 5 லட்சத்து 85 ஆயிரத்து 580 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http//elections.tn.gov.in என்ற இணைய முகவரிக்குள் சென்று வாக்காளர்கள் தங்களது பெயர் களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தேர்தல் பதிவு அலுவலர்களை நேரடியாக சந்தித்து படிவங்களை பூர்த்தி செய்து பெயரை இணைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

www.nvsp.in என்ற இணைய முகவரிக்குள் சென்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வாக்காளர் உதவி செயலி என்ற செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!