தமிழகத்தின் புது சீஃப் செகரட்டரி சண்முகம் & நியூ டிஜிபி திரிபாதி = முழு விபரம்!

தமிழகத்தின் புது சீஃப் செகரட்டரி சண்முகம் & நியூ டிஜிபி திரிபாதி = முழு விபரம்!

தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதி மற்றும் புதிய தலைமை செயலராக கே.சண்முகம் ஆகியோரை நியமித்து தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதை அடுத்து புதிய தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இதில் கே.சண்முகம் தமிழகத்தின் 46வது தலைமைச் செயலாளராகும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2016ம் ஆண்டு, அப்போது தலைமைச் செயலாளராக பதவி வகித்த ராம மோகன ராவ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். எனவே ராம மோகன ராவ் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதில் சண்முகம், தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், இவரை விட சீனியரான, அதாவது 1981ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு முதல், இதுவரை, தொடர்ச்சியாக நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வருபவர் கே.சண்முகம். இந்த காலகட்டங்களில், திமுக மற்றும் அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு மாறி வந்தாலும் கூட, இதே துறையில் பதவி வகித்தார் சண்முகம். கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ஒரே பதவியில் பொறுப்பு வகித்தவர் சண்முகம் ஐஏஎஸ் மட்டுமே என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில்.

இந்த அளவுக்கு அவர் மீது இரு ஆட்சியாளர்களுக்கும் அபார நம்பிக்கை உண்டு. காரணம், நிதி பற்றாக்குறை இருந்தபோதிலும், கருணாநிதி கொண்டு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவியவர் இவர். போலவே, ஜெயலலிதா அரசு கொண்டு வந்த அம்மா கேண்டீன் திட்டத்தையும் செயல்படுத்த நிதி ஒதுக்கியவர்.

தமிழக அரசு நிதி சுமையில் சிக்கிக் கொள்ளாமல், அதே நேரம், அதிகம் செலவுபிடித்த இவ்விரு திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தியவர்தான், சண்முகம். எனவேதான், இவர் அனைத்து ஆட்சியாளர்களின் அபிமானம் பெற்றவராக விளங்கினார். இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரே முதல் சாய்சாக மாறியுள்ளார். எனவேதான், சண்முகத்தை விட சீனியர்களான ஆர்.ராஜகோபால், ராஜீவ் ராஜன் போன்றவர்கள் இருந்தும், தலைமைச் செயலாளர் பதவியை சண்முகத்திற்கு கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

சண்முகம், கூட்டுறவு துறை முதன்மை செயலாளராகவும், அதற்கு முன்பாக, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளனவர். சேலம், சண்முகத்தின் சொந்த ஊராகும். வேளாண் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் 1985 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாகும்.

அது போல் புது டிஜிபியாகப்பட்ட ஒடிசா மாநிலத்தில் பிறந்த ஜே.கே. திரிபாதி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் படிப்பில் பட்டம் பெற்றவர். 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து இந்திய காவல் பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ள இவர்,

டிஐஜி-ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை தெற்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்ட இவர், தமிழ்நாடு காவல் துறையின் நிர்வாகத்துறை ஐ.ஜி ஆகவும் பணிபுரிந்தார். பின்னர் தெற்கு மண்டல ஐ.ஜி, ஆயுதப்படை, குற்றம், பொருளாதாரக் குற்றம், காவல் தலைமையகம், அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக சேவையாற்றினார்.

மேலும், கூடுதல் டிஜிபி ஆக சிறைத்துறையில் பணியாற்றியுள்ள திரிபாதி, இரண்டு முறை சென்னை பெருநகர காவல் ஆணையராகவும், சட்டம் – ஒழுங்கு, அமலாக்கத்துறையில் கூடுதல் காவல்துறை இயக்குநராகவும் (ஏடிஜிபி) பணியாற்றியுள்ளார்.டிஜிபி திரிபாதிடிஜிபி திரிபாதிஇந்த நிலையில், தற்போது இவர் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

திரிபாதி திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, பொதுமக்கள் – காவல்துறைக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பீட் ஆஃபீசர் முறை, புகார் பெட்டித் திட்டம், சேரி தத்தெடுப்பு முறை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

அதேபோல், சிறைத்துறையில் இருந்தபோதும், மகாத்மா காந்தி சமூகக் கல்லூரியை அனைத்து சிறைகளிலும் நடைமுறைப்படுத்தினார்.. கொடூரர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க துணியும் திரிபாதி, குற்றம் புரிந்தோர் திருந்தவும் நல் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து அன்பு காட்டியவர். சிறைத்துறை தலைவராக திரிபாதி பதவி வகித்தபோது, கைதிகளுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத் தர முயற்சி செய்தார். சிறையில் சமூக கல்லூரி அமைத்தார். கைதிகளை தத்தெடுக்கும் திட்டம் கொண்டு வந்தார்.

பெற்ற விருதுகள்:தேசிய விருதுகள்:-
காவல்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்கான குடியரசுத் தலைவர் விருது – 2002 இந்திய அரசின் மால்கம் ஆதிசேஷையா சிறப்பு விருது – 2001 பிரதம மந்திரியின் பொது நிர்வாகத்திறன் விருது – 2008 – இந்த விருது பெற்ற முதல் காவல்துறை அலுவலர் திரிபாதி ஆவார்.

சர்வதேச விருதுகள்:-
சர்வதேச சமூகக் காவலர் விருது – கனடா நாட்டின் டொரண்டோவில் நடைபெற்ற 110 நாடுகள் பங்கேற்ற 108ஆவது சர்வதேச முதன்மை காவலர்கள் சங்கத்தின் நிறைவு விழாவில் இவ்விருது திரிபாதிக்கு வழங்கப்பட்டது – அக்டோபர் 31, 2001ஸ்காட்லாந்தில் நடைபெற்ற விழாவில் காமன்வெல்த் சங்கத்தின் பொது நிர்வாகம், மேலாண்மைப் பிரிவு சார்பில் நிர்வாகத் திறனில் புதுமை படைத்ததற்கான தங்கப் பதக்கம் – செப்டம்பர் 11, 2002″Friendly Neighbourhood Cops” என்னும் தலைப்பில் இந்திய அரசு தயாரித்த ஆவணப் படத்தில் இவரது பணியினை சிறப்பு செய்யும் விதமாக காட்சிகள் அமைத்து நாடு முழுவதும் அனுப்பப்பட்டது.”Innovation for India Foundation” என்னும் அமைப்பு இவரது முயற்சிகளுக்காக 2006ஆம் ஆண்டு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

error: Content is protected !!