முதல்வராகிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி!

முதல்வராகிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி!

எடப்பாடி கே.பழனிச்சாமியை தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே பதவியேற்க உள்ளார். மேலும் ஆட்சியமைத்த 15 நாட்களுக்குள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

edabadi feb 16a

இதனையடுத்து பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை யில் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14- ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அளித்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தின் அடிப்படையில் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துள்ளார்.

ஆளுநருடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்த அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் கடந்த 10 நாட்களாக நிலவிய இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளதால், இன்னும் 15 நாட்களுக்கு அரசியல் பரபரப்பு நீடிக்கும் என்று தெரிகிறது.

இனி இந்த எடப்பாடி பழனிச்சாமி  மினி தகவல்

எடப்பாடி பழனிச்சாமி என்று அழைக்கப்படும் பழனிச்சாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம்.

1972 – சிலுவம்பாளையம் பகுதியின் அதிமுக கிளைச் செயலாளர். 

1983 – அதிமுக ஒன்றிய இணைச் செயலாளர்.

1989 –  எம் ஜி ஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவின் அதிமுக சார்பாக எடப்பாடியில் போட்டியிட்டுமுதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

1991, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

1998 – திருச்செங்கோடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

2011  நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2016 பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2017 சட்டமன்ற கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (16-02-2016) மாலை தமிழக முதல்வராக பதவியேற்க ள்ளார்.

டெயில் பீஸ்;

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியே 69 லட்சத்து 66 ஆயிரத்து 584 என தாக்கல் செய்துள்ளார். வங்கி உள்ளிட்டவைகளில் கடன் ஏதுமில்லை என்றும் குடும்பத்தினர் எவரது பெயரிலும் சொந்தமாக வாகனம் ஏதுமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!