தமிழ்நாடு கோர்ட்டுகளில் சிவில் ஜட்ஜ் போஸ்ட் இருக்குது!

தமிழ்நாடு கோர்ட்டுகளில் சிவில் ஜட்ஜ் போஸ்ட் இருக்குது!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள 320 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் இளம் பட்டதாரிகள் எனில், 22 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே அட்வகேட்/பிளீடர்/ஏ.பி.பி., போன்ற ஒன்றை செய்பவராக இருந்தால் பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., பி.சி.எம்., விதவைகள் பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சட்டப் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அட்வகேட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தமிழில் பேச, எழுத, படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். இளம் பட்டதாரிகள் மூன்று வருடத்திற்குள் சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஏற்கனவே அட்வகேட்/ ஏ.பி.பி., பயிற்சி செய்பவராக இருந்தால், குறைந்த பட்சம் 3 ஆண்டு கால அனுபவம் தேவைப்படும். முழு விபரங்களுக்கு இணைய தளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக் கட்டணம் ரூ. 500.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். பிரிலிமினரி தேர்வு 2018 ஜூன் 9ல் நடைபெறும். மெயின் தேர்வு 2018 ஆக., 11 மற்றும் 12ல் நடைபெறும்.

கடைசி நாள் : 2018 மே 7.

விபரங்களுக்கு :  ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!