லா காலேஜ் சேரப் போறீங்களா? உங்களுக்கான தகவல் இது! – AanthaiReporter.Com

லா காலேஜ் சேரப் போறீங்களா? உங்களுக்கான தகவல் இது!

சட்டப்படிப்புகளில் சேர மே 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

பி.ஏ.எல்.எல்.பி(ஹானர்ஸ்) உள்ளிட்ட 5 ஆண்டு சட்டப்படிப்புகளில் சேர மே 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்புக்கு ஜூன் 28ம் தேதியில் இருந்தும், எல்.எல்.எம் சட்டப்படிப்புக்கு ஜூலை 24ம் தேதி  முதல் விண்ணப் பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிப்புக்கு மே 16ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையும், 3 ஆண்டு எல்.எல்.பி படிப்புக்கு ஜூன் 28ம் தேதி முதலும் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல்  தகவல்களை சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் மே 16ம் தேதி முதல் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.