தமிழ்நாடு மீன்வள பல்கலைகழக்த்தில் பல்வேறு பணிவாய்ப்பு! – AanthaiReporter.Com

தமிழ்நாடு மீன்வள பல்கலைகழக்த்தில் பல்வேறு பணிவாய்ப்பு!

தமிழ் நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம் என்பது இத்துறையில் தொழில் நுட்ப ரீதியான படிப்பை வழங்கும் பல்கலை கழகமாகும். இப்பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

காலியிட விபரம்: அசிஸ்டென்ட் புரொபசரில் பேகல்டி இஆப் பிஷரீஸ் சயின்சில் 33, பேகல்டி ஆப் பேசிக் சயின்சில் 7, பேகல்டி ஆப் பிஷரீஸ் இன்ஜினியரிங்கில் 2, அசிஸ்டென்ட் லைப்ரரியனில் 1ம் சேர்த்து மொத்தம் 43 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி
: பிஷரீஸ் சயின்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எப்.எஸ்.சி., படிப்பை முடித்திருக்க வேண்டும். நெட், ஸ்லெட் அல்லது செட் தேர்வு மதிப்பெண்கள் தேவைப்படும். பேசிக் சயின்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் புலத்தில் முது நிலைப் பட்டப் படிப்பு முடித்திருப்பதுடன் நெட்/ஸ்லெட் அல்லது செட் தேர்வு மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். அதே போல் பிஷரீஸ் இன்ஜினியரிங் பிரிவுக்கு விண்ணப்பிக்க அக்வாகல்சர் அல்லது அக்ரி இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். லைப்ரரியன் பிரிவுக்கு இப்பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

reach the

Registrar,

Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University,

Nagapattinam-611 001

கடைசி நாள் : 2019 ஆக., 2.

விபரங்களுக்கு
: ஆந்தை வேலைவாய்ப்பு