கொரோனா பாதிப்பு – தியேட்டர் & மால்களை மூடுங்க- முதல்வர் அறிக்கை முழு விபரம்! – AanthaiReporter.Com

கொரோனா பாதிப்பு – தியேட்டர் & மால்களை மூடுங்க- முதல்வர் அறிக்கை முழு விபரம்!

கோவிட்-19 வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு கர்நாடக மாநிலத்தில் 76 வயதான முதியவர் ஒருவரும், டில்லியில் 68 வயது மூதாட்டி ஒருவரும் பலியாகி உள்ளனர். இந்த நோய்க்கிருமி மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 31 பேர் கரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில், 137 நாடுகளில் 5,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,