எங்கூர் கமாண்டர் அபி-க்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கோணும்!- எடப்பாடி கோரிக்கை – AanthaiReporter.Com

எங்கூர் கமாண்டர் அபி-க்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கோணும்!- எடப்பாடி கோரிக்கை

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய போர் விமானம் அபி நந்தனுக்கு அவரது திறமையைப் பாராட்டி பரம வீர சக்கரம் விருது வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்

ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற தொகுப்புப் பேருந்து மீது பயங்கர வாதிகள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி இந்திய வீரர்கள் 40 பேரை குரூரமாக கொலை செய்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் மீது இந்திய போர் படை விமானங்கள் 26ஆம் தேதி தாக்குதல் நடத்தின இந்த தாக்குதலின் போது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் குண்டு வீசித் தாக்கப்பட்டது

இந்திய போர் விமானங்களின் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் நடத்த மறுநாள் 27 ஆம் தேதி பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் குண்டு வீச சி தாக்குதல் நடத்த முன்வந்தனர் உடனடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் போர் விமானங்களை வழிமறித்து எதிர் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தான் போர் விமானங்கள் மீது எதிர்தாக்குதல் நடத்திய விமானங்களில் ஒன்று மிக்-21 விமானம் ஆகும் அந்த விமானத்தின் விமானி சென்னையைச் சேர்ந்த அபிநந்தன். அவர் தனது மிக்-21 விமானம் ஏவுகணை மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் 16 விமானம் மீது தாக்குதல் நடத்தினார் இந்த விமானம் வீழ்த்தப்பட்டது அதேசமயம் அபிநந்தன் இயக்கிய விமானம் சுடப்பட்டது இந்த ஏவுகணை தாக்குதலில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த அபிநந்தன் பாராசூட் மூலம் உயிர் தப்பினார்.ஆனால் அவரது பாரசூட் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விழுந்தது உடனடியாக அபிநந்தன் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்படுத்தப்பட்ட அபிநந்தன் மிகவும் கடுமையான சூழ்நிலைகளிலும் நிலைகுலையாது கண்ணியம் காத்து பாகிஸ்தான் ராணுவத்தினரின் வினாக்களுக்கு சிறப்பாக பதிலளித்தார். இந்த விசாரணையால் இந்திய மக்கள் மனதில் அபிநந்தன் நீங்காத இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் அவருக்கு இந்திய ராணுவத்தின் உயரிய விருதான பரம வீர சக்கர விருது வழங்கும் படி பிரதமர் மோடி அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறுபிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை முன்வைத்துள்ளார்