பெண்கள் அணிய வேண்டிய உடை எது, அணியக் கூடாததெது? – தஜிகிஸ்தான் அரசு வெளியிட்ட புத்தகம் !

பெண்கள் அணிய வேண்டிய உடை எது, அணியக் கூடாததெது? – தஜிகிஸ்தான் அரசு வெளியிட்ட புத்தகம் !

ஆணோ அல்லது பெண்ணோ ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவையாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் விளங்குவது ஆடை. நம் இலக்கியங்களில் ஆடைகள் பற்றிய பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. உடுக்கை, துணி, ஆடை, உடுப்பு, குப்பாயம், மெய்ப்பை, பட்டுடை, கலிங்கம், புடவை, கச்சு, தானை, படாம் என்பன சங்க காலத்தில் ஆடையைக் குறிக்கும் சொற்களாகும். மனிதன்  தோன்றிய காலத்திலிருந்து ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு ஆடையை அணிந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் பலர் கருதுகின்றனர். தட்பவெட்பநிலைக்கு ஏற்றவாறும், பிற விலங்குகளிட மிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கும், அடையாளச் சின்னத்திற்காகவும், கவர்ச்சி மற்றும் அழகுபடுத்திக் கொள்வதற்காகவும் மனிதன் ஆடையை பயன்படுத்தியுள்ளான்.

காலச்சூழலுக்கு ஏற்றவாறு தமிழர்கள் ஆடைகளை அணிந்துள்ளனர். அவ்வகையில் குறைந்த அளவு ஆடைகள் உடுத்தியவர்கள் பண்பாட்டுக் கலப்பின் காரணமாக இன்று அதிக ஆடைகளை அணியும் வழக்கமும், ஆண்கள் அணியும் ஆடைகளைப் பெண்களும் அணியும் வழக்கம் இன்றையச் சூழலில் காணப்படுகிறது. எனவே, காலந்தோறும் ஏற்படும் அரசியல், பொருளாதாரம், சமயம் போன்ற சூழல்களுக்கு ஏற்ப ஆடைகளும், உடுத்தும் முறைகளும், மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. அதே சமயம் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக முஸ்லீம் பெண்கள் அடை அணிவதற்கென பல சட்ட திட்டங்கள் இருப்பதை நாமறிவோம். இந்நிலையில் பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும், எவ்வாறு உடைய அணியக் கூடாது? என்பதை குறிப்பிடும் புத்தகம் ஒன்றை தஜிகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் “பரிந்துரைகளின் புத்தகம்” அந்நாட்டின் கலாசார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 7 வயது முதல் 70 வயதான வரையான பெண்கள், பொருத்தமான ஆடைகளை அணிந்துள்ள மாடல் அழகிகளின் படங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவரவர் வேலை நேரத்தில், தேசிய மற்றும் மாநில விடுமுறைகளில், திருமணங்களுக்கு, வார இறுதியிலும் கூட என்ன ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு அறிவுறுத்தும் அத்தியாயங்களை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது.

குறிப்பாக தஜிகிஸ்தான் நாட்டு பெண்கள் எதனை அணிய கூடாது என்று புத்தகத்தின் கடைசியில் ஓர் அத்தியாயம் விளக்குகிறது. அதிபர் எமோமிலி ரஹ்மோன் தெரிவித்திருக்கும் கண்டிப்பு ஒருபுறம் இருந்தாலும், இன்னும் புகழ் இருக்கின்ற இஸ்லாமிய ஆடைக்கு எதிரான தேசிய பரப்புரையின் ஒரு பகுதியாக கறுப்பு ஆடைகள், தலை துணி, மற்றும் கிஜாபுக்கு எதிராக இந்த புத்தகம் அறிவுரை வழங்குகிறது.

ஊடுருவி தெரிகின்ற மெல்லிய மேற்கத்திய உடைகளும், குட்டை பாவாடையும் அனுமதிக்கப்படவில்லை. பொருத்தமான ஆடைகளில் மார்பகத்தின் மேல்புறத்தை காட்டும் வகையிலான மற்றும் பின்பக்கமில்லாத ஆடைகளுக்கு ஊக்கமளிக்கப் படவில்லை. பொது இடங்களில் குதிகால் உயிர காலணி அல்லது எளிதாக களன்று விடும் செருப்பு (சிலிப்பர்) அணிய கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுபோல இறுக்கமான கால்சட்டைகள் அல்லது செயற்கை துணிகள் உடல் நலத்திற்கு கேடானது என்று இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.முந்தைய சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் முக்கியமாக முஸ்லீம் மக்களே வாழ்ந்தாலும், பாரம்பரிய கலாசாரத்தில் இருக்கும் மதசார்பற்ற நாடு என்பதை அரசு உறுதி செய்ய முயன்று வருகிறது.

இதனிடையே இந்தப் புதிய புத்தகம் பற்றி வெளிவந்துள்ள சமூக ஊடக எதிர்வினைகள் எல்லாம் நேர்மறையாக மட்டும் இருக்கவில்லை. இந்த கருத்து மிகவும் நன்றாக உள்ளது என்று ஒருவர் புகழ்ந்துள்ள நிலையில், தேசிய ஆடைகளுக்கு உயர்ந்த விலை நிர்ணயித்திருப்பதற்கு வேறு சிலர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். “கலாசார அமைச்சக அதிகாரிகள் எங்களுக்காக ஆடைகள் வாங்கி தரட்டும்” என்றும் அவர்கள் கோரியுள்ளனர். உங்களுக்காக உண்ணுங்கள், அடுத்தவருக்காக உடுத்துங்கள் என்பார் பெஞ்சமின் பிராங்க்ளின். மிஷேலின் செயல்பாடு, இந்த நவநாகரிக உலகத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, நாங்கள் தொடர்ந்து பழைமைவாதிகளாகவே எண்ணெய்க் கிணறுகளுக்குள்ளேதான் வாழ்க்கையை ஓட்டுவோம் என்பது போல் இருக்கிறது. உலகின் ஒவ்வொரு நாடும் பண்பாடு என்று கமெண்ட் இட்டுள்ளார்

இறுக்கமான ஆடைகள் உடலின் சில பாகங்களை மிகைப்படுத்தி காட்டுகிறது என்பதற்கு எதிராக, “உடலின் எந்தப் பகுதியை? மூளையிலுள்ள வீக்கத்தையுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!