சுவாதி கொலைகாரனை பிடிக்க போலீஸ் அனுப்பிய எஸ் எம் எஸ்! – AanthaiReporter.Com

சுவாதி கொலைகாரனை பிடிக்க போலீஸ் அனுப்பிய எஸ் எம் எஸ்!

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் இன்போசிஸ் சுவாதி, கடந்த 24ம் தேதி(ஜூன் 24) சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்மநபரால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையில் 8 தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் செங்கோட்டை அருகே தனது தாத்தா வீட்டில் மறைந்திருந்த ராம்குமார் என்பவனை , போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு ராம்குமார் முயற்சி செய்துள்ளான். இதனையடுத்து செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவனுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது.

swathi july 2

ராம்குமார் செங்கோட்டை அருகிலுள்ள மீனாட்சிபுத்தை அடுத்த பன்பொழி கிராமத்தை சேர்ந்தவன். ஆலங்குளம் பொறியியல் கல்லூரியில் பி,இ., படித்தவர். வேலை தேடி சென்னை சென்ற ராம்குமார், சூளைமேட்டிலுள்ள மேன்ஷன் ஒன்றில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளான். அப்போது சுவாதியுடன் ராம்குமாருக்கு ஒருதலைக்காதல் ஏற்பட்டுள்ளது. ராம்குமார் 3 மாதமாக முயற்சித்தும் தனது காதலை சுவாதி ஏற்காததால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளான். இதற்கு அவனது நண்பர் ஒருவரும்உதவி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இக்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சிஅலைகளை ஏற்படுத்தியது. கொலையாளி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த போதும், தெளிவற்ற உருவமாக இருந்ததால் அவனை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சுவாதியின் மொபைல் போனை கொலையாளி சம்பவ இடத்திலிருந்து எடுத்து சென்றுள்ளான். இதனையறிந்த போலீசார், சுவாதியின் நண்பர் ஒருவரின் எண்ணிலிருந்து சுவாதியின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., ஒன்றை உடனடியாக அனுப்பியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காலை 8 மணி முதல் 8.10 மணி வரை சுவாதியின் மொபைல் போனை கொலையாளி ஆன் செய்து வைத்துள்ளான். அப்போது எஸ்.எம்.எஸ்., டெலிவரி ஆகியுள்ளது. இதனை வைத்து ஆய்வு செய்த போலீசார், செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியில் இருந்ததை கண்டறிந்தனர்.

இதனையடுத்து கொலையாளியின் புகைபடத்தை கொண்டு, சூளைமேடு பகுதியில் வீடுவீடாக போலீசார் சோதனை நடத்தினர்.கொலையாளியின் புகைபடத்தை பார்த்த சூளைமேடு பகுதியிலுள்ள மேன்ஷன் காவலாளி ஒருவர்போலீசாரிடம், துப்பு கொடுத்துள்ளார். போலீசாரிம் கொலையாளி ராம்குமார் போல் உள்ளான் எனவும், நெல்லையை சேர்ந்தவன் எனவும் காவலாளி தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையான நாளிலிருந்து ராம்குமார் மேன்ஷனிலிருந்து மாயமாகி இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து நெல்லை விரைந்த தனிப்படை போலீசார், ராம்குமாரின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

நள்ளிரவில் போலீசாரை கண்ட ராம்குமார், தனது கையிலிருந்த பிளேடால் கழுத்தை அறுத்துள்ளான். உடனடியாக அவனை கைது செய்த போலீசார், செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை நடந்த போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை போலீசார் கைபற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒப்புதல்:சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்குமாரின் கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் ராம் குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை :ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாய் மற்றும் அவரது சகோதரி, சகோதரர் ஆகிய 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளைமேடில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான CCTv படத்தை பார்த்துவிட்டு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தவர் சூலைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனின் வாட்ச்மேன்.அவர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறை விசாரனையை முடுக்கிவிட்டு தற்போது ராம்குமாரை கைது செய்திருக்கிறார்கள். நேற்று மதியம் முதலே சுப்பிரமணியபுரத்தில் ராம்குமாரின் வீட்டை நோட்டமிட்டு வந்த காவல்துறையினர் நள்ளிரவில் புகுந்து ராம்குமாரை கைது செய்திருக்கின்றனர்.

சுவாதியை கொலை செய்தது குறித்து 5 நாட்களுக்கு முன்பே தன் தந்தையிடம் தெரிவித்ததாக ராம்குமார் விசாரனையில் சொல்லியிருக்கிறான்.காவல்துறையினர் வந்து ராம்குமாரின் தந்தையிடம் விசாரித்துக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் இருந்த ராம்குமார் கதவை தாழ்ப்பாள் போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்.கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ராம்குமாரின் நண்பன் ஒருவனை தற்போது போலிசார் தேடிவருகின்றனர்.