சூர்யாவின் 24 – திரை விமர்சனம்! – AanthaiReporter.Com

சூர்யாவின் 24 – திரை விமர்சனம்!

1990 -களில் தொடங்குது கதை. சேதுராமன் என்ற விஞ்ஞானியாக வருகிறார் சூர்யா. இவரோட மனைவி நித்யா மேனன். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. இதுக்கிடையிலே சேதுராமன் காலத்தை கடக்கும் டைம் மிஷனை கண்டு பிடிக்கிறார். அதை அபகரிக்க திட்டமிடுகிறார் இவரது கோ பிரதரான வில்லன் சூர்யா (ஆத்ரேயா).

cine may 6அது தெரிந்து  எஸ்- ஆகிப் போகும் போது ஆத்ரேயாவால் சூர்யா-நித்யா மேனன் கொல்லப்படறாங்க..ஆனாலும் அந்த சம்பவத்தில் ஆத்ரேயா பாலத்திலிருந்து குதிச்சப் போது கோமாவுக்கு செல்கிறார். இச்சுழ் நிலையில் அழுத குழந்தை சரண்யா பொன்வண்ணனிடம் கிடைக்க அவர் வளர்க்கிறார்.

இதையடுத்து 26 வருடத்திற்கு பிறகு கதை சென்னையில் தொடங்குகிறது. வாட்ச் ரிப்பேர் செய்யும் மெக்கானிக்காக வருகிறார் மகன் சூர்யா (மணி).சமந்தாவை சந்திக்க அவருடன் காதல் வருகிறது. அப்புறம் வீட்டில் இருக்கும் வாட்ச் பற்றி தெரிய வர சமந்தாவை இம்பரஸ் செய்ய பயன்படுத்துகிறார்.

இதற்கு நடுவில் கோமாவிலிருந்து மீண்ட ஆத்ரேயா அந்த வாட்ச்சை தேடி அலைகிறார்.

அதன் பின் என்ன ஆனது ஆத்ரேயாவுக்கு வாட்ச் கிடைத்ததா? மகன் சூர்யாவுக்கு தன்னுடைய ப்ளாஷ்பேக் தெரிந்ததா? அப்பா சேதுராமனை சந்தித்தாரா? என்பதே மீதிக்கதை.

படம் முழுவதையும் ஆக்கிரமிப்பது சூர்யா..சூர்யா..சூர்யா மட்டும் தான். அப்பாவி விஞ்ஞானி ,சேதுராமன், அட்ராசிட்டி ஆத்ரேயா மற்றும் துறுதுறு மணி என மூன்று வேடங்களில் படம் முழுக்க வெரைட்டி விருந்து வைக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுநீள சூர்யா படம்.ஆனாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வித்தியாசம் காட்டி இருக்கிறார். அதிலும் வில்லன் சூர்யாவானா =ஆத்ரேயா மிரட்டல் நடிப்பு. நித்யா மேனன், சமந்தாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லை. சரண்யா செண்டிமெண்டில் அசத்துகிறார்.படத்தின் ஒளிப்பதிவு அசத்தலாக உள்ளது.

பின்னணி இசையில் ஏ.ஆர். ரஹ்மான் பட்டைய கிளப்பியுள்ளார்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் பல ட்விஸ்ட்கள் வருகின்றன.

மொத்தத்தில் 24 என்ற அந்த வாட்ச்சை சுற்றியேதான் படம் நகர்ந்தாலும் சலிப்படைய வைக்காத திரைக்கதை!.

இருந்தாலும் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

ரொமான்ஸ் காட்சிகள் பெரியளவில் ஈர்க்கவில்லை.

எப்படியோ அடுத்தடுத்து ஏற்பட்ட ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து விட்டார் சூர்யா என்றுதான் சொல்லலாம்1.