பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட ‘மங்குட்’ புயல் சீனாவுக்கு விசிட்!

பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட ‘மங்குட்’ புயல் சீனாவுக்கு விசிட்!

இந்த ஆண்டின் ரொம்ப ஸ்ட்ராங்கான புயல் என்று சொல்லப்படுகிற ‘மங்குட்’ புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவை முற்றிலுமாய் புரட்டி போட்டு விட்டது.இந்தப் புயலாலும், மழையாலும், நிலச்சரிவாலும் நேரிட்ட சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்து உள்ளனர். சுமார் 15 பேர் காணாமல் போய் உள்ளனர். விவசாய பயிர்கள் பெருமளவு சேதம் அடைந்து உள்ளன. நிறைய சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தகவல் தொடர்பு வசதிகள் முடங்கின. மின்வினியோகம் தடைப்பட்டு உள்ளது. கட்டிடங் கள் பெரும் சேதம் அடைந்து இருக்கின்றன. ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து இந்தப் புயல் சீனாவை நோக்கி நேற்று விரைந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் இன்று கரையை கடந்தது.புயல் காரணமாக மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதில், இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்த மங்குட் புயல், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குவாங்டாங் மாகணத்தில் உள்ள ஜிங்மன் கடற்பகுதியில் சுமார் 162 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 25 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 48 ஆயிரம் படகுகள் உடனடியாக கரை திரும்பிவிட்டன. வெளியேற்றப்பட்ட மக்களுக்காக 3 ஆயிரத்து 777 அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

புயலினால் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புக்களை தொடர்ந்து ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளுக்காக அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. அந்நாட்டிலுள்ள லுசான் தீவை உருக்குலைய வைத்து விட்டு, இந்தப் புயல் சீனாவை நோக்கி நேற்று விரைந்தது. மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. புயலால் ஹாங்காங்கில் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே புயல் எதிர்பார்ப்பினால் ஹாங்காங், சீனா ஆகிய இரு நாடுகளும் மக்களுக்கு எச்சரிக்கைகள் விடுத்து உள்ளன.

சீனாவில் 7 நகரங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஷென்ஜென் விமான நிலையம் மூடப்பட்டது. குவாங்சோவில் விமான சேவைகள் இன்று வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஹைனான் மாகாணத்தில் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சீனாவின் குவாங்ஸி பிராந்தியத்தில் புயலால் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

error: Content is protected !!