ஜி.எஸ்.டி. போஸ்ட் ஜிகினாக்களும், ஜில் ஜங் ஜக்குகளும்! – AanthaiReporter.Com

ஜி.எஸ்.டி. போஸ்ட் ஜிகினாக்களும், ஜில் ஜங் ஜக்குகளும்!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து….இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது…………ஜி எஸ் டி போஸ்ட் ஜிகினாக்களும், ஜிள் ஜங் ஜக்குகளும்….இது என்ன சம்பிரதாயமோ பல பேர் நேத்து ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லை இங்கு போஸ்ட் பண்ணிருந்தார்கள். இதில் பல பாருங்க அநியாயத்தை 5% வரி 12% வரி 18% வரினு மோடியை மோடு முட்டி அளவு திட்டியிருந்தார்கள்.100த்துக்கு மேல அப்படி பட்ட போஸ்ட் பார்த்ததில் ஒன்று புரிந்தது…………. 35 ரூவாய்க்கு காப்பி ஏன்டா விக்கிறேன்னு கேட்க வக்கில்லை ஆனா அதுக்கு 5% வரி கட்டியதர்க்கு பொங்குகிறார்கள். இன்னும் சில பேர் பாருங்க சார் முருகன் இட்லி கடையில கூட நான் வரி கட்டினேன்னு போட்ட பல பேருக்கு அங்கே ஏன் இட்லி 50 ரூவாய்க்கு விற்க படுகிறது, சட்னி கின்னியில தர்ற பொங்கலுக்கு ஏன்டா 80 ரூவான்னு கேட்க திராணியே இல்லாம கவர்மென்ட்டை திட்றது சரி..

காஷ்மீர்ல ஒரு பிரச்சினைனா மோடிதான், கன்னியாகுமாரில ஒரு ரோட்ல பள்ளம்னாகூட மோடி தான் காரணம், அட அப்ரன்டிஸ்களா இந்த வரி கட்டாம தான் இவ்வளவு நாள் பவன்கள் எல்லாம் தன் வியாபாரத்தை பெருக்கி கொண்டே ஒரு பக்கம் இருந்து கொண்டு இன்னொரு பக்கம் லாஸ் லாஸ் லாஸ்னு சொல்லி சொல்லி ஒவ்வொருத்தனும் பிள்ளையார் கோயில் கணக்கா பின்கோடுவுக்கு ஒன்னு ரென்டுனு திறந்துகிட்டே இருக்கானுங்க ஆனா மக்கள் கஷ்டப்படுவாங்கனு முதலை கண்ணீர் வேற,,,,,,,,,, காக்கா எச்சம் போல 150 தோசைக்கு கொஞ்சம் சட்னி எக்ஸ்ட்ரா தாடான்னா அது எக்ஸ்ட்ரா சார்னு 5-10 ரூவா புடுங்கும் இந்த புடுங்கிகளா மக்கள் பிரச்சினையை நினைச்சு வருத்தப்படுவாங்க………… இந்த வரி வரலைனா நாம இன்னும் பின்னோக்கி தான் போவனும்,

ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க, சில்லியா கூட இருக்கலாம் உண்மை இது தான். இந்த மாதிரி வரி கட்ட சொல்லி இருக்கிற சர்க்கார் தான் நோட்டு அடிக்கிறாங்க அவங்க நினைச்சா நோட்டை மட்டும் அடிச்சிகிட்டே போலாம் ஒத்த ரூவா வரி போடாம. ஆனா அபப்டி பண்ணினா நீங்கல்லாம் பொது கழிப்பீடத்துல அவசரத்துக்கு ஒன்னுக்கோ – ரென்ன்டுக்கோ இல்லை மூனுக்கோ போகனும்னா கூட பல 2000 தாள்களை தரும் அளவுக்கு பண வீக்கம் ஏற்பட்டு அப்புறம் வெனின்ஸுலா, கிரீஸ்னு போல நாடு நாசமா போய்டும்.

அதெல்லாம் சரி நாங்க ஏழை, நடு கிளாஸ்னு சொல்றவங்க தண்ணி பாட்டில் , பிளாஸ்க், சோத்து மூட்டையை கட்டிகிட்டு போனா ஆட்டோமேட்டிக்கா இந்த பவன்கள் விலையை குறைப்பாங்க இப்ப அவங்க லாபம் 300 – 450 சதவிகிதம்ங்கோ……..PS – சரி இம்புட்டு மார்ஜின் வருதே இந்த பாவபட்ட மக்களுக்காக செலுத்த வேண்டிய 5% வரி நாம செலுத்தி நம்ம மார்ஜினை 300% சதவிகித்துல இருந்து 295% சதவிகதம் ஆக்கிகுவோம்னு ஒரு புளாசுளாக்கி கூட நினைக்காத வரை அந்த சிறு , குறு, பெத்த புளாசுளாக்கி வணிகர்களை நம்பவேண்டாம்.