ஜாதி மத இனம் இல்லாத சமுதாயத்தை நோக்கி பயணிப்போம்! – AanthaiReporter.Com

ஜாதி மத இனம் இல்லாத சமுதாயத்தை நோக்கி பயணிப்போம்!

இன்று சண்டை என்பதால் தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – சமூக நீதி காக்கும் கட்சிகளின் மொத்த முதலாளிகள் பற்றி கொஞ்சூண்டு யோசிப்போமா?!

அநேக அரசியல் கட்சிகள் – சமூக நீதி காக்க பாடுபடும் போக்கை உற்று இல்லை இல்லை வெற்று நோக்கினால் கூட அது ஒரு பிம்பிளிக்கி பிசுக்கோத்து ரகமாகத்தான் இருக்கின்றது, சமூக நீதி ஒவ்வொரு அரசியல்வாதிகளும் வேறு வேறாக திரித்து செயல் படுகின்றனர் மக்களை முட்டாள் ஆகின்றனர் என்பது தான் ஆக சிறந்த உண்மை.

99 % உயர்ந்த தாழ்ந்த சாதி இல்லைனு சொல்லும் இவர்கள் – இவர்கள் வாரிசுகள் மற்றும் இவர்களின் குடும்பம் தான் அந்த கட்சிக்கும் அந்த கட்சியின் அறக்கட்டளைக்கும் ஏகபத்திய ஓனர்கள் என்பது 100 % உண்மை.

தாழ்ந்த சாதி மக்களை முன்னேற்றுவோம் என்று மார் தட்டி அரசியல் செய்யும் எந்த ஒரு சாதி கட்சியும் தான் சாதி ஆட்களை தவிர வேறு தாழ்ந்த சாதியில் பிறந்தவரை தலைவராய் அமர்த்துவது இல்லை…!

இன்னும் ஒரு படி மேல போய் இவர்களின் சாதி கொடுமைகளை களைவோம்னு சொல்லிட்டு ஆபிஸ்ல போய் உட்கார்ந்து கட்சி ஆட்களை செருப்பை வெளியே கழட்டி வைத்து வெறும் காலோடு தான் உள்ளே வரணும் – அது போக அவர் தலைவரிடம் பேசி முடிக்கும் வரை நின்று கொண்டே தான் இருக்கணும் என்பது எழுதாத நியதி.

ஊர்ல செவுரு எழுப்பறது – இரட்டை குவளை வைப்பது – பாலத்தில் இருந்து பிணத்தை இறக்கி கொண்டு இறுதி ஊர்வலம் செய்ய சொல்வது – தாழ்த்தப்பட்ட சத்துணவு ஆயா சமைச்சதை சாப்பிட கூடாதுனு கூவரது – பரிவட்ட பிரச்சனைன்னு ஆயிரம் வெச்சுகிட்டு – சவுண்டி பாப்பானையும் – சம்பளமே இல்லாம சில்லறைகளை வைத்து பிழைப்பை நடத்து செத்து செத்து பிழைக்கிற பாப்பானையும் – சாதி எதிர்ப்பாளர்களாய் சித்தரிப்பது……!

சாதி ஒழிப்பேன்னு கூவிட்டு – நம்ம சாதி பையன பாருங்க இல்லைனா போட்டு தள்ளிருவோம்னு சொல்றது – சாதி இல்லை சாமி இல்லைனு சொல்லிட்டு – பேருக்கு முன்னாடி தான் சாதி அடையாளமாய் – சுப / கரு / பழ அப்படினு போட்டு மக்களை குழப்புவது இப்படி பல ஈன புத்தி கொண்ட அரசியல் வாதிகள் தான் இன்றைக்கு அதிகம்.

இவர்களை நன்கு அடையாளம் கண்டு கொள்ளுங்கள் – இவர்களை புறம் தள்ளுங்கள் – இவர்களை எப்போதும் போல பூஜ்யமாய் வைத்து இவர்களை டம்மி பீஸ்களாய் போராட விடுங்கள் என்பதே நன்கு படித்த – பண்பான – ஜாதி மத இனம் இல்லாத சமுதாயத்தை நோக்கி பயணிப்போம்னு உறுதி எடுங்கள்.

PS – Secularism is applicable for 1.3 Billion Indians – NOT for selective politics or politicians like you…. SAVE IT