விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இறுதிச் சடங்கு லண்டனில் நடந்தது!,

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இறுதிச் சடங்கு லண்டனில் நடந்தது!,

கண்ணசைவில் காலத்தை கடத்தி மனித வாழ்க்கைக்கு பயனூட்டிய சாதனை மனிதர். ஸ்டீபன் ஹாக்கிங்.. 21 வயதில் ஏ.எஸ்.எல் எனும் உடலியக்கத்தை முடக்கக் கூடிய கொடிய நோயால் பாதிக்கப்பட்டும், விடா முயற்சியுடன் வாழ்க்கையை தொடர்ந்தவர் போன மார்ச் 14-ம் தேதி அதிகாலை தனது 76-வது வயதில் காலமானார்.

நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம்.

இந்தப் பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது.

மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது.

என்றெல்லாம் சொல்லி வந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச்சடங்கு நேற்று(தான்) நடைபெற்றது.

லண்டனில் ஹாக்கிங்கின் உடல் தேவாலயத்தை அடைந்தவுடன், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு ஆண்டையும் குறிக்கும் வகையில் 76 முறை மணி ஒலிக்கப்பட்டது. பிரபஞ்சத்தை குறிக்கும் அல்லி மலர்கள் மற்றும் துருவ நட்சத்திரத்தை குறிக்கும் வெள்ளைநிற ரோஜாக்கள் ஹாக்கிங்கின் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்தன.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் உடலை அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சியாளராக இருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்திற்கு ஆறு சுமை தூக்குபவர்களால் எடுத்துச்செல்லப்பட்டது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் சவப்பெட்டியை அவரது குடும்பத்தினர் சுமந்து சென்றனர். சவப்பெட்டி மேல்நோக்கி தூக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கரவொலி எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் சாம்பல் ஜூன் 15-ம் தேதி அடக்கம் செய்யப்படும். கடந்த 1727ஆம் ஆண்டு இறந்த சர் ஐசக் நியூட்டன் உடலும், அதற்குப் பின்னர் 1882ல் உயிரிழந்த சார்லஸ் டார்வின் உடலும் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!