டெபிட் கார்ட் காலாவதியாகப் போகுது – ஸ்டேட் பேங்க் முடிவு! – AanthaiReporter.Com

டெபிட் கார்ட் காலாவதியாகப் போகுது – ஸ்டேட் பேங்க் முடிவு!

மத்திய அரசு கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப் பதற்காக, கடந்த 2016 நவ. 8-ம் தேதி பணமதிப்பு நீக்கத்தை அறி வித்தது. அதன்படி, புழக்கத்தில் இருந்து வந்த ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு, ரொக்கப் பணத்தை பொதுமக்கள் கையாளுவதற்கு பதிலாக மின்னணு (டிஜிட்டல்) பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது அல்லவா? அதன் அடுத்தக் கட்டமாக இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்துவரும் டெபிட்கார்ட் சேவையை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நம் நாட்டில் அதிக மக்கள் கணக்கு வைத்திருக்கும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, வங்கித்துறையில் புதியவற்றை அவ்வபோது தன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துவருகிறது. அந்த வகையில், அதன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திவரும் டெபிட் கார்டு சேவையை கைவிட முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, எஸ்பிஐ-யின் ‘யோனோ’(YONO- You Only Need Once) மூலம் ஏடிஎம்-களில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் இந்த ஆப்பின் மூலம் டெபிட் கார்டுகள் இல்லாமலேயே ஷாப்பிங் செய்யாலாம் என்றும் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும், பிளாஸ்டிக் கார்டுகளை ஒழிக்கும் விதமாகவும் எஸ்பிஐ இந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து விளக்கமளித்துள்ள சேர்மன் ரஜ்னிஷ் குமார் “டெபிட் கார்டுகளை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். கண்டிப்பாக அதை நீக்குவோம்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியாவில் மொத்தம் 90 கோடி டெபிட் கார்டுகளும், 3 கோடி க்ரெடிட் கார்டுகளும் உள்ளன. பொதுமக்கள் ‘YONO’ போன்ற மின்னணு தீர்வுகளை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வதன் மூலம் டெபிட் கார்டுகள் இல்லாத நாட்டை உருவாக்கலாம் என்று ரஜ்னீஷ் குமார் தெரிவித்து உள்ளார். அதோடு “YONO”மூலம் பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கலாம் அல்லது ஷாப்பிங்கின் போது இதன் மூலம் பணம் செலுத்தலாம். இந்த பரிவர்த்தனை களுக்கு டெபிட் கார்டு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கி ஏற்கனவே 68000 ‘YONO’ பணம் எடுக்கும் மையங்களை நிறுவி விட்டதாகவும், அடுத்த 18 மாதங்களில் இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் டெபிட் கார்டு பயன்பாட்டை குறைக்க முடியும் என்று ரஜ்னீஷ் தெரிவித்துள்ளார். ‘YONO’ வை பயன்படுத்தி சில வணிகங்களுக்கு க்ரெடிட் கார்டாகவும் பயன் படுத்திக்கொள்ளலாம், இன்னும் ஐந்து வருடங்களில் பிளாஸ்டிக் கார்டுகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுவிடும், பிளாஸ்டிக் கார்டுகளை எங்கௌம் எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை, இனி வர இருப்பது டிஜிட்டல் கூப்பன்கள் காலம் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.