எஸ்பிஐ ஏடிஎம்களில் இரவு நேரத்தில் பணத்தை எடுக்க மொபைல் அவசியம்! – AanthaiReporter.Com

எஸ்பிஐ ஏடிஎம்களில் இரவு நேரத்தில் பணத்தை எடுக்க மொபைல் அவசியம்!

ஏ.டி.எம். கார்டுகள் இல்லாமலே பணம் எடுக்கும் யோனோ கேஷ் என்ற வசதியை, எஸ்.பி.ஐ. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் நிலையில் இன்று முதல் இரவு 8 மணிக்குப் பிறகு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் ஏடிஎம்மில் இருந்து அதிக பணம் எடுக்க விரும்பினால், உங்கள் தொலைபேசியை கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என எஸ்பிஐ வாங்கி தெரிவித்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் (ATM) இருந்து பணம் எடுக்க ஒரு கடவுச்சொல் (ஓடிபி-OTP) தேவைப்படும். இந்த நிபந்தனை 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீங்கள் எடுக்க விருப்பப் பட்டால் ஓடிபி அவசிய மாகும். இதனால் அவசரமாக பணம் எடுக்க விரும்பினால் உங்கள் மொபைலை உங்களிடம் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் டெபிட் கார்டை பணம் எடுக்க ஏடிஎம் (ATM) இயந்திரத்தில் கார்டை உள்ளே நுழைத்து விவரங்களை தந்த பிறகு OTP கோரப்படும். OTP எண்ணை செலுத்திய பின்னரே பணத்தை வெளியே வரும். எஸ்பிஐயின் இந்த ஏற்பாடு கணக்கு வைத்திருப்பவர்களின் ஏடிஎம் தவறாகப் பயன்படுத்து வதைத் தடுப்பதற்கும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஆகும். இருப்பினும், எஸ்பிஐ வாடிக்கை யாளர்கள் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்தால், அப்பொழுது ஓடிபி அவசியம் இருக்காது.

ஆக எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…..
– ஜனவரி 1 முதல் ஏடிஎம் சென்றால், தொலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
– ரூ .10,000 க்கு மேல் பணம் எடுக்க விரும்பினால் OTP கட்டாயம்.
– இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஓடிபி இல்லாமல் பணம் இல்லை.
– ஏடிஎம்மில் அனைத்து விவரங்களை செலுத்திய பிறகு OTP தேவைப்படும்.
– இதன் மூலம் மோசடியைக் குறைக்க முடியும்.
– மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு OTP தேவை இல்லை.

ஏடிஎம்மில் நடைபெற்று வரும் மோசடியைத் தடுக்க, நாட்டில் செயல்படும் வங்கிகள் பல முயற்சி களை மேற்கொண்டு வருகின்றன. முதலில் அனைத்து வங்கிகளும் சிப் உள்ள ஏ.டி.எம். கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்தன. தற்போது ஏடிஎம் பரிவர்த்தனையின் போது 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை எடுப்பதற்கு புதிய நடைமுறை கொண்டு வரப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் ஏடிஎம் மூலம் 10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க ஓடிபி கட்டாயம் என SBI வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.