இந்திய கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு உரிமையை ரூ.6138.1 கோடி மட்டுமே! – ஸ்டார் & ஜியோவின் சாதனை !

இந்திய கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு உரிமையை ரூ.6138.1 கோடி மட்டுமே! – ஸ்டார் & ஜியோவின் சாதனை !

இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை 2023 ம் ஆண்டு வரை ஒளிபரப்பும் உரிமையை சர்வதேச டி.வி.க்களில் தனி பெருமை வாய்ந்த ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் ரூ.6,138.1 கோடிக்கு வாங்கியுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலத்தில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.2018-2023 வரைக்குமான ஒப்பந்தமாகும் என்பது குறிப்பிடத்தக்கது .

நம் நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை ஒளிபரப்பும் உரிமைக்கான ஏலம் கடந்த 3 நாள்களாக நடந்து வந்தது. பரபரப்பான இந்த ஏலத்தில் ஸ்டார் இந்தியா, ரிலையன்ஸ் மற்றும் சோனி ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்குகொள்ளத் தகுதியான நிறுவனங்களாக இந்தியக் கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முதன்முறையாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் இந்திய அணி உள்ளூரில் விளையாடும் போட்டிகள் மற்றும் உள்ளூர் தொடர்கள் என அனைத்துவிதமான கிரிக்கெட் தொடர்களையும் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை 5 ஆண்டுகள் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றியது. இதற்காக அந்த நிறுவனம் ரூ.6138.1 கோடி செலவழித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்திய அணி, 102 போட்டிகளில் விளையாடுகிறது. சராசரியாக ஒவ்வொரு போட்டிக்கும் பி.சி.சி.ஐக்குக் கிடைக்கு வருமானம் ரூ.60 கோடிக்கும் சற்றே அதிகமாகும்.

இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் இரண்டு பணமழை உரிமைகளை ஸ்டார் இந்தியா பெற்றுள்ளது, ஒன்று ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமை, இதனை கடந்த செப்டம்பர் 2017-ல் ரூ.16,347 கோடிக்கு தட்டிச் சென்றது. ஐபிஎல் ஒப்பந்தம் 2018-22 வரை உள்ளது.
இதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் உரிமைகளை 2012-18 என்ற ஆறாண்டுகளுக்கு ஸ்டார் இந்தியா பெற்ற போது ரூ.3851 கோடி கொடுத்து ஒப்பந்தம் பெற்றது, இப்போது 59% கூடுதலாக அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஸ்டார் இந்தியா ஆடவர் இந்திய கிரிக்கெட்டின் 102 போட்டிகளை ஓளிபரப்புகிறது. மேலும் இந்திய உள்நாட்டுப் போட்டிகளுக்கான உரிமைகள் மற்றும் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான உரிமைகளும் அடங்கும்.

அடிசினல் ரிப்போர்ட்:

ஐபிஎல் போட்டிகளை ஹாட் ஸ்டார் ஆப் மூலமும் பார்க்க முடியும். தற்போது புதிதாக விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டு உள்ளது. விஆர் என்ற தேர்வை தேர்வு செய்வதன் மூலம் போட்டிகளை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்ப சாதனத்தில் கண்டு ரசிக்கலாம்.  இந்த  புதிய முறை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துமாம்.
error: Content is protected !!