தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் தேதிகள் இதோ! – AanthaiReporter.Com

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் தேதிகள் இதோ!

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியில் அன்றாடம் மாறுதல் செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு களுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது. பதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 17 ஆம் தேதி துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியை பொறுத்தவரை, ஏப்ரல் 24 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கு மே 14 ஆம் தேதியும், மே 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:
17.03.2020 – மொழித்தேர்வு – முதல் தாள்
19.03.2020 – மொழித்தேர்வு – இரண்டாம் தாள்
21.03.2020 – விருப்பமொழிப் பாடம்
27.03.2020 – ஆங்கிலம் – முதல் தாள்
30.03.2020 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
02.04.2020 – கணிதம்
07.04.2020 – அறிவியல்
09.04.2020 – சமூக அறிவியல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை:
04.03.2020 – மொழிப்பாடம்
06.03.2020 – ஆங்கிலம்
11.03.2020 – கணக்கு, வணிகவியல், விலங்கியல்
13.03.2020 – கணினி அறிவியல்
18.03.2020 – இயற்பியல், பொருளாதாரம்
23.03.2020 – உயிரியல், வரலாறு, தாவரவியல்
26.03.2020 – வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை:
02.03.2020 – மொழிப்பாடம்
05.03.2020 – ஆங்கிலம்
09.03.2020 – கணக்கு, வணிகவியல், விலங்கியல்
12.03.2020 – கணினி அறிவியல்
16.03.2020 – இயற்பியல், பொருளாதாரம்
20.03.2020 – உயிரியல். வரலாறு, தாவரவியல்
24.03.2020 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்