மத்திய அரசு பணி வேணுமா?

மத்திய அரசு பணி வேணுமா?

மத்திய அரசு பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது ஜூனியர் இன்ஜினியர் மற்றும் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் பிரிவுகளில் உள்ள 1,136 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

காலியிட விபரம்: ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் பிரிவில் 9 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் பிரிவிலான ஆர்மமெண்ட்-அம்யூனிஷனில் 16, ஆர்மனென்ட்-வெப்பன்சில் 1, ஆர்ம்ஸ் பிரிவில் 2, இன்ஸ்ட்ருமென்ட்சில் 9, மெட்டலர்ஜியில் 14, க்யூ.ஏ., ஸ்டோர்சில் 5, எலக்ட்ரானிக்சில் 16, வெகிக்கிளில் 14, எம். அண்டு இ.,யில் 1, ஹெரால்டிக் அசிஸ்டென்டில் 1, ஜூனியர் பிசியோதெரபிஸ்டில் 9, சீனியர் சயிண்டிபிக் அசிஸ்டென்டில் 2 உட்பட 130 பிரிவுகளில் மொத்தம் 1,136 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவினைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் பட்டப் படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு வழியாக தேர்ச்சி இருக்கும். இத்தேர்வில் ஜெனரல் இன்டலிஜென்ஸ், பொது அறிவு, குவாண்டிடேடிவ் ஆப்டியூட், பொது ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் கேள்விகள் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ 100.

கடைசி நாள்: 2018 செப்., 30.

விபரங்களுக்குwww.ssc.nic.in

Related Posts

error: Content is protected !!