நான் ஏன் பிரதமர் பொறுப்பேற்றேன் தெரியுமா?மகிந்த ராஜபக்‌ஷ விளக்கம்

நான் ஏன் பிரதமர் பொறுப்பேற்றேன் தெரியுமா?மகிந்த ராஜபக்‌ஷ விளக்கம்

மஹிந்த ராஜபக்ஷவை, அரசமைப்பின் பிரகாரமே பிரதமராக நியமித்தேன் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாகரிக அரசியலுக்கு பொருந்தாத அரசியல் செயல் முறை யையே ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்தார் எனவும் எனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துடன், கைகோர்த்துக்​கொள்ளுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்த நிலையில் நீதித்துறையினது சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஆட்சியை ஏற்படுத்தும் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய பிரதமராகப் பதவி வ்யேற்றுள்ள மகிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டு மக்களினது மனித உரிமைகளையும், நீதித்துறையினது சுதந்திரத்தையும் பாதுகாக்கும் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தும் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவோம்.

இந்த முயற்சியில் எங்களுடன் இணையுமாறு நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிற்கும் நான் அழைப்பு விடுகின்றேன். இத்துடன் எமது நாட்டில் அக்கறையுள்ள அனைத்து சமூகங்க ளையும் மதங்களையும் எம்முடன் இணையுமாறும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இலங்கையின் அரசியல் தற்போது குழப்பமான நிலையில் காணப்படுகின்றது. ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்த தகவல் கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்த சதி முயற்சியில் ஈடுபட்டவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் தங்களையே குற்றவாளிகளாக வெளிப்படுத்தியுள்ளனர். நாடு சட்டவிரோத குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதாள உலகத்தவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

தற்போது குழப்பநிலை காணப்படுவதால் மக்கள் எமது தலைமைத்துவத்தையும் பாதுகாப்பையும் எதிர்கொள்கின்றார்கள் என்பது எமக்குத் தெளிவாகப் புரிகின்றது. இதன் காரணமாக பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன்” என மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அந்நாட்டு ஜனாதிபதி சிறிசேனா நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார். அவர் தன்னுடைய உரையில், “மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பில், ரணில் விக்கிரமசிங்க பொறுப்பு கூற வேண்டும்.மேலும்,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை, ரணில் விக்கிரமசிங்கவே, நாட்டுக்கு அழைத்துவரவேண்டும்.

என்னையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும், படு கொலைச் செய்வதற்காக, எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பிலான தகவலை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட து.

இந்த சூழ்ச்சி தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், தகவல் வெளியாகி 48 மணி நேரத்துக்குள், அந்த குரல் போலியானது என்று தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொடுக்காது, வேறுப்பிரிவுக்கு வழங்கினார். அதில் நான் சந்தேகப்பட்டேன்.

என்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது. ரணில் விக்கிரமசிங்க வீம்புக்கும், பிடிவாதமாகவும், கூட்டாக முடிவெடுப்பதை தவிர்த்தார். தனித்து முடிவுகளை எடுக்க முனைந்தார். இந்த அணுகுமுறை பல முரண்பாடுகளுக்கு இட்டுச் சென்றது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கும் கொள்கை முரண்பாடும் இருந்தது. கொள்கை வேறுபாடுகள் தவிர அவருக்கும் எனக்கும் கலாசார வேறுபாடுகளும் கூட இருந்தன.

இந்த அரசியல் பிரச்சினைகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், என்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தினாலும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுக்கும் மாற்றுத் தெரிவு ஒன்று மட்டுமே எனக்கு இருந்தது” என்று தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!