இலங்கை ; சிறிசேனா அமைச்சரவையில் மாற்றம்!

இலங்கை ;  சிறிசேனா அமைச்சரவையில் மாற்றம்!

இலங்கை ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு இடையில், அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைச்சரவையில் இன்று சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் நட உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே அமோக வெற்றிபெற்றதையடுத்து, ஆளும் கூட்டணியான இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகள் பெரும் சிக்கலுக்கு தள்ளப்பட்டன. இதனால் மக்களின் மனநிலையை புரிந்துகொண்ட அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, இலங்கை அரசின் கொள்கைகள், திட்டங்கள், நடவடிக்கைகள் என அனைத்தையும் மேம்படுத்த வேண்டும் என தீர்மானித்தார். அனைத்திற்கும் மேலாக இலங்கை அமைச்சரவையில் சில மாற்றங்களையும் கொண்டுவந்து மக்களுக்கு சிறப்பான சேவைகளை செய்ய முடிவுசெய்தார். அதிபராக பதவியேற்ற சிரிசேனா, 2ஆவது முறையாக அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 6 கேபினட் அமைச்சர்கள், 3 இணை அமைச்சர்கள் மற்றும் 1 துணை அமைச்சர் ஆகியோரின் பதவிகள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. அதன்படி, தேசிய கொள்கை அமைப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராகவும் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சட்டம் – ஒழுங்கு அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சட்டம் – ஒழுங்கு துறையை இதுவரை நிர்வகித்துவந்த அமைச்சர் சகலா ரத்னாயகாவுக்கு, இளைஞர்கள் நலத்துறை மற்றும் இலங்கை தெற்கு மாகாணங்கள் மேம்பாட்டுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரெல்லாவுக்கு மாநில தொழில்துறை அமைச்சராகவும், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக கபிர் ஹாஷிமும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரத்துறை இணை அமைச்சராக டாக்டர் ஹர்ஷா டி சில்வாவும், புணர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சராக அஜித் பெரேரா ஆகியோரை நியமித்தும் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.நியமிக்கப்பட்ட அனைவர்களும் அதிபர் சிறிசேனா முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

error: Content is protected !!