இந்தியாவுக்கும் வந்தாச்சு – ஸ்பாடிஃபை நிறுவனத்தின் இசைச் செயலி!

இந்தியாவுக்கும் வந்தாச்சு – ஸ்பாடிஃபை நிறுவனத்தின் இசைச் செயலி!

கேட்டீங்களா.. இந்த சேதியா?தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பாலிவுட் மற்றும் சர்வதேச பாடல்களுடன் இந்திய ரசிகர்களை கருத்தில் கொண்டு இலவச சேவையுடன்  அமெரிக்காவின் முன்னணி மியூசிக் ஸ்டீரிமிங் சேவை வழங்கும் Spotify ஒருவழியாக இந்திய பயனாளர்களுக்கான சேவையை தொடங்கியுள்ளது.

நம் நாட்டில் பிரபலமான மியூசிக் ஸ்டீரிமிங் சேவை அளிக்கும் அப்ளிகேஷன்களான  gaana, JioSaavn, Wynk போல அமெரிக்காவில் பிரபலமாக இருந்து வருவது Spotify. அமெரிக்கா மட்டுமல்லாது உலக அளவிலும் இது பிரபலமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் வெற்றிக்கொடிநாட்டிய Spotify தற்போது இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்க இந்தியாவில் கால்பதித்துள்ளது. அதிலும் இந்திய ரசிகர்களை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள கட்டணங் களை விட குறைந்த அளவிலான கட்டண நிர்ணயத்துடன் இது களமிறக்கப்பட்டுள்ளது.  ஸ்பாடிஃப்பை நிறுவனம் பாடல்களை ஒலிபரப்புவதில் சிறந்தததாக இருந்தாலும் இவைகளின் பாட்காஸ்டுகளும் (Podcast) பலரால் விரும்பப் படும் ஒன்று.ஸ்பாடிஃபை செயலிக்குள் இருக்கும் ஆல்காரிதம் கொண்ட மென்பொருளால் நமக்கு விரும்பும் வகை பாடல்களை தேர்ந்தொடுத்து வரிசையாக ப்ளே செய்ய முடியும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, இணையதளம் மட்டும் இல்லாமல் எக்ஸ் பாக்ஸ் ஓன், விண்டோஸ் 10, ப்ளேஸ்டேஷன் 4, அமேசான் எக்கோ போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர் களிலும் இந்த செயலியை இணைத்து, பாடல்களைக் கேட்க முடியும்.

இந்திய இசையை உலக ரசிகர்களுக்கு எடுத்துச் செல்வதுடன், உலக இசையையும் இந்திய இசை பிரியர்களுக்கு எடுத்து வருவதில் Spotify பெரும் பங்காற்ற உள்ளதாக அதன் நிறுவனரான டேனியல் தெரிவித்துள்ளார். இத்தளத்தில் 300 கோடி Playlistகளுடன் 4 கோடிக்கும் அதிகமான பல மொழி பாடல்கள் கிடைக்கின்றன. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பாலிவுட் மற்றும் சர்வதேச பாடல்களுடன் இந்திய ரசிகர்களை கருத்தில் கொண்டு இலவச சேவையுடன் Spotify களமிறங்கியுள்ளது. இது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் தளங்களிலும் கிடைக்கிறது.

என்னென்ன பிளான்கள்?

இந்தியாவில் 3 நாள் இலவச டிரையல் பேக் கிடைக்கிறது. இதில் விளம்பரம் இல்லாத இலவச மியூசிக், பாட்கேஸ்ட் மற்றும் ஆஃப்லைன் சப்போர்டுடன் கிடைக்கிறது. இலவச சேவைக்கு பின்னர் 119 மாதாந்திர கட்டணத்தில் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஒரு நாளுக்கு குறைந்தபட்சமாக 13 ரூபாய் செலுத்தி இந்த சேவையை குறுகிய கால அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். PayTM தளம் வழியாக இதனை டாப்-அப் செய்துகொள்ளலாம்.

Top Up பிளான்கள்:

7 நாட்களுக்கு  – 39 ரூபாய்
ஒரு மாதத்திற்கு – 129 ரூபாய்
3 மாதங்களுக்கு – 389 ரூபாய்
6 மாதங்களுக்கு – 719 ரூபாய்
ஒரு ஆண்டிற்கு – 1,189 ரூபாய்

மாதாந்திர சேவைகளில் மாணவர்களுக்கு 50% தள்ளுபடியும் கிடைக்கிறது.

போட்டியாளர்களின் பிளான்கள் எவ்வளவு? (மாதம் ஒன்றிற்கு)

Apple Music – ரூ.120
Google’s Play Music – ரூ.99
Saavn – ரூ.95
Wynk Music – ரூ.120

error: Content is protected !!