உ ள்ளாட்சி அமைப்புகளுக்கு ஸ்பெஷல் ஆபீசர்! – கவர்னர் ஆர்டர் போட்டாச்சு!

உ ள்ளாட்சி அமைப்புகளுக்கு ஸ்பெஷல் ஆபீசர்! – கவர்னர் ஆர்டர் போட்டாச்சு!

உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிய இன்னும் 4 நாட்களே இருப்பதால், அவற்றுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பிறப்பித்து உள்ளார்.

mayor oct 20

‘தமிழ்நாடு ஊராட்சிகள் 3-வது திருத்த அவசர சட்டம் 2016’ என்ற பெயரில் பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த அவசர சட்டத்தின்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, கிராம ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக பொறுப்பை கவனிக்க தனி அதிகாரிகளை அரசு நியமிக்கும் என்று அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது..

தனி அதிகாரிகளின் பதவி காலம் ;

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் நாள் அல்லது டிசம்பர் 31-ந் தேதி ஆகிய இந்த இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை தனி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் இருப்பார்கள் என்றும் அந்த அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

,முன்னதாக தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன என்பதுடன் இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது என்பதும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!