ஸ்பேஸூக்கு போய் வர ராக்கெட் ரெடி! – நீங்க தயாரா..? – AanthaiReporter.Com

ஸ்பேஸூக்கு போய் வர ராக்கெட் ரெடி! – நீங்க தயாரா..?

உலகத்தின் பெரிய ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் இன்று லான்ச் செய்யப்பட்டு வெற்றிகரமாக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த ராக்கெட் நாஸா மற்றும் அரசாங்கத்தின் எந்த ஒரு அரசு நிறுவனத்தை சாராத தனியார் ராக்கெட் ஆகும்.

தினமும்தான் ராக்கெட் போகுதே இதுலே என்ன ஸ்பெஷல்-ன்னு நினைச்சா மனுஷங்களை ஏற்றி செல்லும் ராக்கெட் இது தான். அது போக இந்த ராக்கெட் வான் வெளிக்கு போய் திரும்பவும் பூமிக்கே பத்திரமாக வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2010ல் ஆரம்பித்த ஆராய்ச்சி இன்று தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ராக்கெட் எக்ஸ் இனிமேல் வான் வெளி, சந்திரன் ஏன் மார்ஸ் என்னும் செவ்வாய் கிரகத்துக்கு கூட ஆட்களை ஏற்றி சென்று அங்கே இறக்கி விடவோ அல்லது அங்க போய் சுற்றி பார்த்து விட்டு திரும்பவும் இங்கே வரும் அளவுக்கு வடிவமைக்கபட்ட ராக்கெட் ஆகும்.

ஒரு 10 ரூபாய் தண்ணீர் பாட்டிலை வான்வெளிக்கு கொண்டு செல்ல பல லட்சம் செலவு ஆகும் போது எப்படி மானிடர்களை ஏற்றி செல்லும் என நீங்கள் கேட்டால் இந்த ராக்கெட் சக்ஸஸ் ஆகியிருப்பதால் அடுத்த டிரிப் மனிதர்களை ஏற்றி செல்லும் அதுவும் ஒன்று இரண்டு ஆட்கள் அல்ல போயிங் 737 விமானத்தில் முழு பயணிகள் கொள்ளளவு மற்றும் உணவு தண்ணீர் என அத்தனை லோடுகள் கொண்ட விமானத்தின் மொத்த கனம் எவ்வளவோ அதே அளவு வெயிட்டை தூக்கும் மெகா ராக்கெட் தான் இந்த ஸ்பேஸ் எக்ஸ்..!

அடுத்த வாரமிந்த கென்ன்டி ஸ்பேஸ் சென்டரில் இருந்து பர்ஸனலாய் இன்னும் தகவல் தருகிறேன் படங்கள் மற்றும் லைவ் வீடியோக்களுடன்.

இன்னொரு முக்கிய விஷயம் – இந்த ஃபால்கென் ஹெவியில் உலகத்திலேயே முதன் முதலாய் டெஸ்லா எலக்ட்ரிக் கார் கொண்டு செல்கிற்து வான்வெளிக்கு.

இந்த ராக்கெட் எப்படி வின்வெளிக்கு சென்று எப்படி பத்திரமாக தரையிறங்கிய வீடியோவை நீங்களே பாருங்களேன்..