ஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…!

ஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது……..ஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…! நிலாவை காட்டி சோறு ஊட்டுவது, நிலாவில் ஆயா வடை சுட்ட கதையை பல நூறு ஆண்டுகளாக கேட்டுகொண்டிருந்த நாம், ஜூலை 22 இந்தியா இன்னொரு சாதனையாக நிலவுக்கு செலுத்தும் சந்திதராயன் 2 ஆகட்டும் – நிலவு என்பது இன்றளவில் வியக்க வைப்பது ஒரு சாமான்யனுக்குத் தானே தவிர விஞ்ஞானிகளுக்கு அல்ல – இது என்ன புதுசான்னு கேட்கபடாது – இது நடந்து 50 வருடங்கள் ஆச்சு..

ஆம், ரீசண்டா கடந்து போன 19 ஜூலை 2019 ஆம் ஆண்டு நாம் நிலவுக்கு உலகத்தில் முதன் முதலாக சென்று இன்றோடு 50 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. அந்த வகையில் நிறைய கான்ட்ர வர்ஸி மற்றும் டிபேட்கள் இருந்தாலும் நாசாக்கும் விஞ்ஞானிகளுக்கும், அதிகம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தெரிந்த‌ உண்மைகளை டாப் 10 ஆக பட்டியிலிட்டுள்ளேன்………..

1. 1903 ஆம் ஆண்டு ரைட்பிதர்ஸின் முதல் மரத்தில் ஆன விமானத்தின் ஒரு சிறிய பகுதியை நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் எடுத்து சென்று அவருக்கு மரியாதை செய்த அந்த சிறிய மரத்துண்டை இன்று வாஷிங்டன் ஸ்மித் சோனியன் அருங்காட்சியகத்தில் காண முடியும்.

2. அப்போலா 11 மூலம் சென்ற முதல் நிலவுக்கான வின்வெளி வீரர்கள் ஒரு வேளை திரும்ப வராமல் போனால் என்னவாகும் என்று ஊகித்து அதற்கான உரையை முன்பே எழுதி வைத்திருந்தனர் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் நிர்வாகம். அந்த உரை இன்றும் பத்திரமாக உள்ளது.

3. நிலவில் கால் வைத்தனர், குதித்தனர் என்று மட்டுமே தெரிந்த தகவலில் இன்னொரு உண்மை இருவரும் 21 மணி நேரம் – 36 நிமிடங்கள் அதாவதுகிட்ட தட்ட ஒரு நாள் முழுவதும் இருந்த சாதனை இன்றளவில் பேசப்படுகிறது.

4. நிலவில் இருந்து திரும்பியர்வகளை 21 நாட்கள் குவாரன்டைன் (quarantine) என்ற ஒரு பிராசஸில் வைக்கட்டிருந்தினர். காரணம்….. அவர்களை வேற்றுகிரக நுண்ணுயிர் கிருமிகள் தாக்கி யிருக்கிறதா என்பதை சோதனை செய்யவே இந்த 21 நாட்கள்.

5. பல மனிதர்களின் புகைப்படங்கள், பல மொழி பேச்சுகளை நிலவில் வைத்துவிட்டு வந்ததது நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் மற்றும் அவர் கூட்டாளியும்.

6. நிலவில் இருந்து வந்திறங்கிய வின்வெளி வீரர்களுக்கு கூட சுங்கத்துறை பரிசோதனை செய்து எவ்வளவு செலவு, நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறாங்கற்கல், துகள்கள், மண் ஆகியவை ஆய்வு செய்யப்பட்ட தகவல் 2015 ஆண்டு தான் வெளி உலகிர்க்கு சொல்லப்பட்டது.

7.அப்போலோ 11 நிலவில் இறங்கிய சமயம் அந்த ராக்கெட்டில் வெறும் 25 நொடிகள் மட்டும் பறப்பதர்க்கான எரிபொருள் இருந்தது. இந்த 25 நொடிகள் தாமதித்து இருந்திருந்தால் அவர்கள் நிலவில் இறங்காமல் தோல்வியோடு கொலம்பியாவுக்கு திரும்பியிருப்பார்கள்.

8. “That’s one small step for man, one giant leap for mankind” ( மனிதனுக்கு இது ஒரு சிறிய முன்னேற்றம் ஆனால் மனித குலத்திர்க்கு இது ஒரு பெரிய முன்னேற்றம் – என்பதை எல்லோரும் எதிர்த்தனர் ஆனால் உண்மையில் அவர் கூறியதில் “a” என்ற வார்த்தை தனி மனிதன் என்ற வார்த்தைக்கு முன்பு சொல்லவில்லை என்று தவறாக புரிந்துகொள்ளபட்டதர்க்காக……..பினபு விஞ்சானிகள் அதை உறுதிபடுத்தினர்.

9. இந்த வரலாற்று நிகழ்வை உலகம் முழுவதும் 55 கோடி முதல் 60 கோடி பேர் கண்டுகளித்தனர் என்றரெக்கார்ட் இன்று பெரிய ரெக்கார்ட். 1969 தொலைக்காட்சி என்பதே பல நாடுகளில் உள்ளவர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்பது கூடுதல் தகவல்.

10. எல்லோருக்கும் தெரிந்த உண்மை – நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் மற்றும் பஸ் ஆல்ட்ரின் மட்டுமே நிலவுக்கு சென்றுவந்தவர்கள் என்று நீங்கள் நினைத்தால் தவறூ – மூன்றாவதாக மைக்கல் காலின்ஸ் என்பவரும் சேர்ந்து மூன்று பேர் நிலவுக்கு பயணித்தாலும் மைக்கல் காலின்ஸ் நிலவில் கால் பதிக்கவில்லை ஆனால் இவரின் தயவு இல்லையெனில் இந்த இருவரும் நிலவில் இறங்கியிருக்கவே முடியாது என்பதும் வரலாற்று உண்மை.

PS – இந்த நிலவு படம் ஜப்பானின் ஸ்பேஸ் ஏஜன்ஸியில் (JAXA) ஒரு நிகழ்வுக்காக அழைக்கபட்டிருந்த போது எடுக்கப்பட்டது, மற்ற புகைப்படங்கள் நாஸாவில் இருந்து கீச்சப்பட்டது.

error: Content is protected !!