நம்ம தெற்கு ரயில்வேயில் வேலை இருக்குதுங்கோ! – AanthaiReporter.Com

நம்ம தெற்கு ரயில்வேயில் வேலை இருக்குதுங்கோ!

தென்னக ரயில்வேயில் பெரும்பாலும் தமிழக மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த பிராந்தி யத்தில் எக்சிகியூட்டிவ் அஸிஸ்டென்ட்ஸ் (இங்கிலீஷ்)/டி.இ.ஓ., மற்றும் டிஜிட்டல் அஸிஸ்டென்ட் (இங்கிலீஷ்) பிரிவில் காலியாக உள்ள 95 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

வயது: 1.10.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.சி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி., அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்புடன் மைக்ரோ சாப்ட் சான்றிதழ் பெற்ற எம்.எஸ்., ஆபிஸ் 10 வெர்ஷனில் சான்றிதழ் படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான தேர்வு, நேர் காணல், மருத்துவத் தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 ஜூன் 30.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு