டென் ஸ்போர்ட்ஸ் சானல்கள் கை மாறிடுச்சு! – AanthaiReporter.Com

டென் ஸ்போர்ட்ஸ் சானல்கள் கை மாறிடுச்சு!

ஸீ எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த டென் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை வாங்க சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனம் 385 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் டென் 1, டென் 1 எச்.டி, டென் 2, டென் 3, டென் கால்ஃப் எச்.டி, டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் ஆகிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களை சோனி நிறுவனம் வாங்குகிறது.

sony aug 31

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, மே.இ.தீவுகள், மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ஒப்பந்தம் கைவசம் உள்ளது. இது தவிர டென் ஸ்போர்ட்ஸிடம் WWE மல்யுத்தம், யுஏஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து நேரலை ஒளிபரப்பு உரிமைகள் உள்ளது. யுஏஃபா ஐரோப்பா லீக், பிரெஞ்ச் லீக், இங்கிலிஷ் ஃபுட்பால் லீக், டென்னிஸில் டபிள்யு.டி.ஏ. மற்றும் ஏடிபி தொடர்கள் நேரலை ஒளிபரப்பு உரிமைகள்,

இதுதவிர முக்கிய சர்வதேச கால்ஃப் தொடர்களின் நேரடி ஒளிபரப்பு உரிமைகள் தடகளத்தில் ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், மோட்டார் ஸ்போர்ட்ஸ், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயங்களின் நேரலை ஒளிபரப்பு உரிமைகளும் டென் நெட்வொர்க் வசம் உள்ளது. அதே போல் சோனி நெட்வொர்க்கிடம் ஐபிஎல், கரீபியன் பிரிமியர் லீக், ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலகக்கோப்பை கால்பந்து, யுஏஃபா யூரோ கால்பந்து 2016, இந்தியாவில் நடைபெறும் ஃபீபா அண்டர் 17 உலகக்கோப்பை கால்பந்து. 2018 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகள், அதாவது ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க தகுதிச் சுற்று போட்டிகள். ஃபீபா கான்பெடரேஷன் கோப்பை போட்டிகள் உட்பட பல விளையாட்டுத் தொடர்களுக்கான நேரலை உரிமைகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில்தான் டென் ஸ்போர்ட்ஸ் நெட் வொர்க்கை ஸீ டெலிவிஷனிடமிருந்து வாங்க சோனி நிறுவனம் 385 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.