சொல்லி விடவா- திரை விமர்சனம்! – AanthaiReporter.Com

சொல்லி விடவா- திரை விமர்சனம்!

நடிகர் அர்ஜீன் தன் மகளை மார்க்கெட்-டை அதிகப்படுத்தும் பொருட்டு தானே இயக்கி தயாரித்திருக்கும் காதல் படம் இது என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும். ஆனால்.. கார்கில் போர் நடைபெற்ற காலத்தில்தான் கதை நடைபெறுகிறது. இரண்டு ஜர்னலிஸ்ட்கள் கார்கில் போரை கவர் செய்ய பயணமாகிறார்கள் எதிரும் புதிருமாக இருக்கும் அவர்களிடையெ இந்தப்பயணம் நாட்டுப் பற்றையும் காதலையும் விதைக்கிறது. அடடே. அப்புறம்.. இருவரும் வாழ்வில் இணைந்தார்களா என்பது தான் கதை.

என்பதுகளின் பிற்பகுதியில் வர வேண்டிய படம். அர்ஜீன் அங்கேயே தங்கிவிட்டார் என்பது தான் கொடுமை. உருவாக்கத்திலும் மிகப் பழமையாக இருக்கிறது. அதிலும் தக்கனூண்டு கேபிள் டி வியில் கூட டெக்னாலஜி உச்சத்தில் இருக்கும் இக்கால ரசிகனை எந்த விதத்திலும் கவர மாட்டேன் என்று அடம் பிடிக்கும் வகையில் படம் இருக்கிறது.

கேமராவை பார்த்து மனப்பாடம் செய்த கதையை ஒப்புவிக்கும் காட்சிகள் எல்லாம் கொடூரம்.

புதுமுகம் சந்தன் அப்படியெ அர்ஜீன் போலவே இருக்கிறார். அவர் போலவே ஆடல் பாடல், சண்டை எல்லாம். ஐஸ்வர்யாவிற்கு நன்றாக நடனமாட வருகிறது. நன்றாக டயலாக் பேசுகிறார். அப்பா பொண்ணா இருக்காமல் நல்ல கதையுடன் கூடிய படங்கள் தேர்ந்தெடுப்பது அவரது கேரியருக்கு நல்லது.

பாடல்கள் சலிப்பை ஊட்டுகின்றன். படத்தின் அதீத நீளம் சீட்டில் நெளிய வைக்கிறது. போர்க்காட்சிகள் மட்டும் பராவயில்லை.

ஆனாலும் போரடிக்கும் திரைக்கதை படத்தை பின்னுக்கிழுக்கிறது. காமெடியன்கள் பாதியிலே ஓடிவிடுவதால் படத்தை காப்பாற்ற ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது.

சொல்லி விடவா … சொல்வதற்கு ஒன்றுமில்லை

 

 கதிரவன்