நம் நாட்டு இளம்பெண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு; ஆய்வில் தகவல்!

நம் நாட்டு இளம்பெண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு; ஆய்வில் தகவல்!

உலகளவில் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பில் ஆறில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது என்பது கவலையை அதிகரிக்கும் செய்தியே இன்னும் பரவலாகாத நிலையில் நம் நாட்டில் பணியாற்றும் இளம்பெண்கள் இடையே புகை பிடிக்கும் பழக்கம் பற்றி அசோகேம் அமைப்பு ஆய்வு ஒன்று மேற்கொண்டது. இந்த ஆய்வில் 22 முதல் 30 வயது உடைய 2 ஆயிரம் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இதில், 2 சதவீத இளம்பெண்கள் அதிக அளவு புகைப்பிடிப்பவர்கள் என தெரிய வந்தது. ஒரு நாளில் ஒரு சிகரெட் பேக் அல்லது அதற்கும் கூடுதலாக உபயோகப்படுத்துகின்றனர்.

அவர்களில் பலர் அதிக நெருக்கடி மற்றும் பணி சார்ந்த அழுத்தம் ஆகியவற்றால் புகைக்கிறோம் என்றும் சிலர் உடல் எடை குறைப்புக்காக புகைக்கிறோம் என்றும் கூறியுள்ளனர். 40 சதவீதத்தினர் மிக குறைவாக புகைப்பிடிப்போர் என தெரிய வந்தது. இவர்கள் ஒன்று அல்லது 2 சிகரெட்டுகளை அதுவும் ஒரு நாளைக்கோ அல்லது எப்பொழுதோ ஒரு முறை என இந்த பழக்கம் கொண்டவர்கள்.

எனினும், அவர்களில் பெருமளவிலானோர் மதுபானம் குடிக்கும்பொழுதே புகைக்கிறோம் என கூறியுள்ளனர். 12 சதவீதத்தினர் நாளொன்றுக்கு 2 முதல் 3 சிகரெட்டுகள் புகைக்கின்றனர். இவர்களில் சிலர் ஈர்ப்பு உணர்வு, சுதந்திரம் ஆகிய உணர்வை இது தருகிறது. மற்றும் நாகரீகத்திற்காகவும் புகைக்கிறோம் என கூறியுள்ளனர்.

சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புனே, அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கொல்கத்தா மற்றும் டெல்லி-என்.சி.ஆர். ஆகிய 10 நகரங்கள் இந்த ஆய்விற்காக எடுத்து கொள்ளப்பட்டன.

அடிசினல் ரிப்போர்ட்:

புகைப்பழக்கம் இன்றைக்குப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புகையால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஏறத்தாழ 60 லட்சம் பேர் உலகளவில் உயிரை விடுகிறார்கள் என்றால் நிச்சயம் வருத்தப்பட வேண்டிய செய்தியே. இந்தியாவில் மட்டும், ஏறத்தாழ 80 லட்சம் பேர் புகையால் பாதிப்படைந்துள்ளதாக முன்னர் ஒரு ஆய்வு தெரிவித்திருந்தது. அதிலும் ஒட்டுமொத்த புகையிலை பாதிப்புக்கு ஆளானவர்களில், பலர் புகைபிடிப்பவர்களின் அருகே இருந்து அதை சுவாசித்ததன்மூலம் பாதிப்புக்கு ஆளானவர்கள். இவர்களைப் போன்றே புகையிலையால் பாதிக்கப்படுபவர்கள், தங்களது வாழ்நாளில் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இழக்கிறார்கள் என்பது கவனத்துக்குரிய விஷயமாகும்.

error: Content is protected !!