விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறை! – தமிழக அரசு தகவல்!

விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறை! – தமிழக அரசு தகவல்!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த வகுக்கப் பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்தும், பழைய முறைப்படி அனுமதி வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறைப்படி அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்து வதற்கு சிலைகளை கரைப்பதற்கு புதிய விதிகளை உருவாக்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அனுமதியை பெறுதல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளி யிடப்பட்டது. இதற்கு எதிரான மனுவில் குறுகிய காலத்தில் அனைத்து அனுமதியையும் பெறுவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது ஒற்றை சாளர முறையில் மாநகரங்களில் காவல் துணை ஆணையரிடமும் மாவட்டங்களில் துணை கண்காணிப்பாளரிடமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டங்களில் துணை கண்காணிப்பாளரை அணுக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் அதை மாற்றியமைக்கவும், 5 நாட்கள் மட்டுமே சிலைக்கு அனுமதி, பட்டா இடத்தில் மட்டுமே அனுமதி, சிலை உயரத்திற்கு கட்டுப்பாடு, மாட்டு வண்டியில் சிலைகளை எடுத்துச் செல்லக் கூடாது போன்ற விதிகளில் மாற்றம் கொண்டுவரவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

சிலை வைக்கும் இடங்களுக்கு தேவையான மின்சாரத்தை அருகில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களின் ஒப்புதலுடன் எடுப்பதில் ஆட்சேபணை இல்லை என்றும், மின் தட கம்பிகளி லிருந்து திருட்டு மின்சாரம் எடுப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்திய நீதிபதி வழக்கின் மீதான உத்தரவை புதன்கிழமை (நாளை) பிறப்பிப்பதாகத் தெரிவித்தார்.

error: Content is protected !!