சிங்கப்பூர் விமான நிலையத்தில் கருவிழி பரிசோதனை! – AanthaiReporter.Com

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கருவிழி பரிசோதனை!

புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றிற்குப் பதிலாக கரு‌‌வி‌ழியை கொண்டு ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்யும் ஸ்கேன் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்தை அ‌ன்றாட ப‌ணிகளு‌க்கு பய‌ன்ப டு‌த்துவதற்கான நேரம் வந்து விட்டதாகவே தெரிகிறது. தற்போது  சிங்கப்பூர்  விமான நிலையத்தில் கருவிழி பரிசோதனை மூலமே பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

ந‌ம் க‌ண்‌ணி‌ன் கரு‌வி‌‌ழியை, கைரேகையை‌ப் போ‌ன்று பய‌ன்படு‌த்துவது தா‌ன் இ‌ந்த தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌ தி‌ன் ‌சிற‌ப்பாகு‌ம். ஒ‌வ்வொரு கரு‌வி‌ழியு‌ம் த‌னி‌த்த‌ன்மை வா‌ய்‌ந்தது. மேலும் ஒ‌வ்வொரு த‌னி ம‌னித‌ னி‌ன் கரு‌‌வி‌ழியு‌ம் த‌னி‌த் த‌ன்மை வா‌‌ய்‌ந்தது என்பதுடன் , ல் ஒரு ம‌னித‌னி‌ன் இடது க‌ண்‌ணி‌ன் கரு‌ வி‌ழி‌க்கு‌ம், வலது க‌ண்‌ணி‌ன் கரு‌வி‌ழி‌க்கு‌ம் ‌வி‌த்‌தியாச‌ம் உ‌ள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு ம‌னித‌ னி‌ன் வா‌ழ்‌க்கை முழுவது‌ம் அவனது கரு‌வி‌ழி‌யி‌ன் அமை‌ப்பு மாறாது. இந்த கரு‌வி‌ழி தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்தை‌ப் பய‌ன்படு‌த்‌தி ஒரு ம‌னிதனை துல்லியமாக அடையாள‌ம் காண முடியு‌ம். த‌ற்போது இ‌ந்த தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் ஒரு ‌சில இட‌ங்க‌ளி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌ம் ‌நிலை‌யி‌ல், அடு‌த்த 10 முத‌ல் 20 ஆ‌ண்டுக‌ளி‌ல் நமது அ‌ன்றாட வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒ‌ன்றாக இது மா‌றி‌விட‌ப் போ‌கிறது

ஆம்.. சிங்கப்பூருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீபகாலமாக உலகள வில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் சிங்கப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வருபவர்கள் குடியுரிமை அலுவ லகத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை இந்த முறை நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது சோதனை அடிப்படையில் ஆங்காங்கே கருவிழி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் கருவிழி பரிசோதனை முழு அளவில் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.