சிங்காரச் சென்னையில் சைக்கிள் ஷேரிங் அடுத்த மாதம் துவக்கம்! – AanthaiReporter.Com

சிங்காரச் சென்னையில் சைக்கிள் ஷேரிங் அடுத்த மாதம் துவக்கம்!

தமிழகத்தின் தலைநகரமான சிங்கார சென்னை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இந்நகர் முழுவதும் வாகன ஓட்டம் இருப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அதிகாலை விடிந்தவுடன் கொஞ்சம் ரிலாக்ஸாக நடக்ககூட வழியில்லாமால் வாகனங்கள் பறக்க தொடங்குவதும், இடையிடையே பரபரப்புடன் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், பேருந்தை துரத்திப் பிடிக்கும் பயணிகள், சாலையின் ஒரு வழிப்பாதையிலும், இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகள், குறுக்கும், நெடுக்குமாக ஒருவரையொருவர் முந்திச் செல்லும் ஆட்டோக்கள், குறுகிய சாலையில் வேகமாக கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், என்று விழி பிதுங்கினாலும் சென்னை போக்குவரத்து மேம்பாடு, சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பை தடுப்பது என ஒவ்வொரு நாளும் பல்வேறு சவால்களை மாநகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் யோசித்து செயல் படுத்த முனைந்துதான் வருகின்றனர். அதன் ஒரு மார்க்கமாக சர்வ தேச அளவில் பல நாடுகளில் கடைபிடிக்கப்படும் வழியொன்றை சென்னை மாநகராட்சி பின்பற்ற முடிவு செய்துள்ளது. அதாவது பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் ஷேரிங் என்ற, திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

இதற்க்காக சென்னை நகரின் சில முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில், 378 இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பொதுமக்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வகையில், 5,000 சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன. இத்திட்டத்தில் சைக்கிளை எடுக்க விரும்பும் பயணியர், ஆதார் எண்ணுடன், தங்கள் விபரங்களை, ‘
தெரிவிக்க வேண்டியது அவசியம்.. தங்கள் மொபைல் ஆப் மூலமாக qr code காண்பித்தால் மட்டுமே சைக்கிளைத் திறந்து பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது.. சைக்கிளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது, அதனை சட்டவிரோதமாக யாராவது திருடி சென்று விட கூடாது என்பதற்காக அனைத்து சைக்கிள்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். அந்த கருவி சைக்கிள் ஷேரிங் நிலையங்களோடு தொடர்பில் இருக்கும். இதனால், ஒவ்வொரு சைக்கிளிலும் எந்தந்த இடத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறியப்படும்.

இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர், “ஒரு நிலையத்தில் எடுக்கப்படும் சைக்கிளை, செல்ல வேண்டிய இடத்தில் உள்ள, மற்றொரு நிலையத்தில் ஒப்படைக்கலாம். சைக்கிள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட தனிப்பாதைகள் உள்ளன. சைக்கிள் பாதைகளில், மற்ற வாகனங்கள் செல்லக் கூடாது. தற்போது, 36 லட்சம் ரூபாய் செலவில் சில சாலைகளில் வண்ணம் பூசி, தனிப்பாதை அமைக்கப்படுகிறது. மேலும் சில சாலைகளில், தடுப்புச்சுவர் கொண்ட தனிப்பாதை அமைக்கப்படுகிறது.இந்த சைக்கிள் ஷேரிங் திட்டத்தை ஒப்பந்தம் எடுக்க சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளன. இதில், குறைந்த கட்டணம் நிர்ணயிக்கும் நிறுவனத்துக்கு, ஒப்பந்தம் கொடுக்கப்படும். இதில் முதற்கட்டமாக, நேப்பியார், சிவனாந்த சாலை, கிரீன்வேஸ் சாலை உள்ளிட்ட, 17 கி.மீ., துாரத்துக்கு, சைக்கிள் ஷேரிங் திட்டம், ஏப்ரல் மாத இறுதியில் துவங்கப்படும்” என்றார்.