சக்திமான் ரிட்டர்ன்!

சக்திமான் ரிட்டர்ன்!

1990-களில் சிறுவர்களின் கதாநாயகனாக திகழ்ந்த சக்திமான் தொடரின் புதிய பாகம் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

shakthimaan

தூர்தர்ஷன் சானலில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பப்பட்ட சக்திமான் தொடர் 90களில் மிகப் பிரபலமான ஒன்று. வாரத்தில் சனிக்கிழமைக்காக காத்திருந்தனர் அக்காலகட்ட இளசுகள் முதல் பெரியவர்கள் வரை.

பண்டிதர் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்காரனாத் சாஸ்தியாக வரும் முகேஷ் கண்ணா, பின் அநீதியைக்கண்டு பொங்கி எழும் சக்திமானாக உருப்பெற்று தீயவற்றை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளால் பெரும் வரவேற்பை பெற்றது அத் தொடர்.

தற்சமயம் சக்திமான் தொடரின் இரண்டாம் பாகமாக சிறு வயது சக்திமான் பற்றியும் அவருக்கு சக்திகள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது பற்றியும் புதிய சக்திமான் தொடர் இருக்கும் என்றும் இதற்காக தனது உடல் எடையில் 8 கிலோ வரை குறைந்துள்ளதாக இதில் சக்திமானாக நடிக்கும் முகேஷ் கண்ணா தெரிவித்தார். மேலும் இதில் நடித்த சில முக்கிய கதாபாத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளனர்.

இத்தொடரை தினமும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்புவது குறித்து தூர்தர்ஷன் சானலுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் முகேஷ் தெரிவித்தார்.அக்காலகட்டத்தில் சக்திமான் ஆடைகள் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!