செஞ்சிட்டாளே என் காதல – விமர்சனம்!

செஞ்சிட்டாளே என் காதல – விமர்சனம்!

இன்றைய ஒவ்வொரு இளைஞர், இளைஞியும் ஐ லவ் யூ என்ற வார்த்தையையும் அதற்கு இணையாக பிரேக் அப் என்ற சொல்லையும் கேஷூவலாக பயன்படுத்துவதையும் அதன் பின்னணியையும் தனது முதல் படத்திலேயே இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகி உள்ள எழில் துரை வெளிப்படுத்த முயன்று ஒட்டு மொத்த பெண்களையும் குறை சொல்வது போல் படத்தை முடித்துள்ளது நெருடத்தான் செய்கிறது.

senju apr 11

காலேஜ் முடித்துவிட்டு வேலை வெட்டிக்கு போகாமல் இருக்கும் ஹீரோ எழில் துரைக்கும், கல்லூரி படிப்பை தொடரும் ஹீரோயின் மதுமிலாவுக்கும் லவ் மலர்கிறது. தனது காதலுக்காக ஹீரோயினின் தோழிகளுக்கு கூட ஜூஸ் பிழிந்து கொடுக்கும் அளவுக்கு காதலில் விழுந்த எழில் துரையை மதுமிலா திடீரென்று கழட்டி விட, அப்படி என்னதான் இவர்களுக்குள் நடந்தது, ஏனிந்த இந்த பிரேக்-அப், பின்னர் வழக்கம் போல் சேர்ந்தார்களா இல்லையா என்பதை வசனம் பேசியே விளக்குவதுடன் ஒரு காதல் தோல்விக்கு இன்னொரு காதல் தீர்வாகாது என்பதை சொல்வதே ‘செஞ்சிட்டாளே என் காதல’ படத்தின் கதை.

ஹீரோ வீராவான எழில்துரை தனக்கு எது முடியுமோ அப்படி நடித்திருக்கிறார். குறிப்பாக வசனங்களும், அதன் தொனியும் அவருக்கு ஏற்றபடி அவரால், எழுதப்பட்டிருப்பது அவருக்கும், அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் பக்காவாக பலம் சேர்த்திருக்கிறது. இதற்கு அவர் குறும்பட பின்னணியில் இருந்து வந்துள்ளதும் இப்போது இளசுகளிடம் புழங்கும் பழக்க வழக்க போக்கை கருவாக தேர்ந்தெடுத்து, அதை சொல்லிய விதத்தில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.

சின்னத்திரை பிரபலமான நாயகி மதுமிலா கொஞ்சம் நெகட்டிவ் ரோல்தான் என்றாலும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். அதிலும் ப்ரண்டுகளின் பேச்சைக் கேட்டு ஹீரோவை கழட்டி விட முயல்வதிலும், நடு ரோட்டில் கதறுவதிலும் ஸ்கோர் செய்வதுடன் ஒரு கட்டத்திற்கு மேல் ஆடியன்ஸ்க்ளே அவர் மீது வெறுப்பு ஏற்படும்படி நடித்திருப்பது ஃப்ர்பக்ட். சோனா வாக வரும் நடிகை அபிநயா தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை நீட்டாக செய்துள்ளார்.

மொத்தத்தில் காலம் காலமாக காட்டப்படும் காதல் குறித்து இன்றைய இளைஞர்கள் கண்ணோட்டத்தில் சொன்ன விஷயத்தில் இன்னும் கொஞ்சம் காரம், மணம், குணம், மசாலா போன்றவைகளை போட்டு தயாரித்து இருந்தால் ஒட்டு மொத்த ரசிகர்களின் அப்ளாஷை அள்ளியிருக்கலாம். எழிலால் அடுத்த படத்தில் இக்குறையை சரி செய்ய முடியும் என்றே ந்ம்புகிறோம்

error: Content is protected !!