மொபைல் ஃபோன் மூலம் முத்தம் கொடுக்கும் “கிஸ் மெசன்ஜர்” அறிமுகம்! – வீடியோ – AanthaiReporter.Com

மொபைல் ஃபோன் மூலம் முத்தம் கொடுக்கும் “கிஸ் மெசன்ஜர்” அறிமுகம்! – வீடியோ

முன்னொருக் காலத்தில் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்! அன்பின் அடையாளமாகி விட்டது முத்தம். தற்போது பலரும் பொது வெளியிலேயே முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பேர்பட்ட முத்தம் குறித்து கொஞ்சம் விரிவான தகவல் முன்னரே வெளியிட்டிருந்தோம்

kiss jan 1 a

இதனிடையே செய்திகளை பரிமாறிக்கொள்ள மெசென்ஜர் உபயோகப்படுத்துவது போல் தொலை தூரத்தில் உள்ளவர்கள் முத்தம் கொடுத்தக்கொள்ள “கிஸ் மெசன்ஜர்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.லண்டனை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் இந்த புதிய கண்டுபிடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிஸ் மெசென்ஜர் என்பது கேட்ஜெட்டை அப்ளிகேஷன் உடன் சேர்த்து இயக்க வேண்டும். வீடியோ சாட் போன்று தான் என்றாலும் இதில் ஒரு சிறு மாறுதல் உண்டு.

உங்கள் மொபைல் உடன் கிஸ் மெசன்ஜர் கேட்ஜெட்டை இணைத்துவிட வேண்டும். கிஸ் மெசன்ஜர் அப்ளிகேஷனை மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். தற்போது கிஸ் மெசன்ஜர் கேட்ஜெட்டில் உதடுகளை கொண்டு அழுத்தம் கொடுத்து முத்தம் கொடுக்கும் போது, அதன் அழுத்தம் எதிர்முனையில் இருப்பவர்களால் உணரப்படும். உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த கிஸ் மெசன்ஜர் வழி முத்தம் கொடுக்கலாம்.

https://www.youtube.com/watch?v=gYGieiXpong