சீறு – விமர்சனம்!

சீறு – விமர்சனம்!
ம்மில் பலருக்கு பொழுது போக்கு அம்சமாகி விட்ட முதல் தமிழ் சினிமா ‘கீசக வதம்’ 1918 -ம் வருஷமும், முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ம் ஆண்டும், வந்திருக்கிறது. அப்படி யாராலோ பெரும்பாடு பட்டு உருவாக்கிய பல சினிமா பல வடிவங்களை தாண்டி வளர்ந்து கொண்டே போகிறது. ஆனாலும் முன்னொரு காலத்தில் இதே சினிமாவை பலத்தரப்பட்ட மக்கள் அரங்குகளின் வாயிலில் காத்துக்கிடந்து கண்ட காலம் மாறி, வீடுகளிலேயே புத்தம் புதிய சினிமா என்ற ஒலியுடன் பார்க்கும் காலம் வந்து விட்டது. இப்படியான சூழலில் கூட இந்த சினிமா மூலம் ஒவ்வொரு விஷயத்தையும் அக்குவேறு ஆணி வேறாக பிய்த்து எறிந்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படித் தான் அம்மா- மகன் தொடங்கி அண்ணன் – தங்கை பாசம் தொடங்கி, அரசியல், ஊழல், வறுமை போன்றவைகளை பல சினிமாக்கள் சிறப்பாக சித்தரித்தன. ஆனால் நம் துர்ரதிர்ஷ்டம் அத்தகைய நல்ல அம்சங்கள் கொண்ட சினிமாக்களின் வரத்து குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நட்பு மற்றும் தங்கை பாசத்தை வைத்து சீறு என்ற பெயரில் பக்கா கமர்ஷியல் படமொன்றை வழங்கி இருக்கிறது வேல்ஸ் பிலிம்ஸ்.

மாயவரத்தில் லோக்கல் கேபிள் டிவி நடத்தி வரும் ஜீவா அவ்வூர் ஜனங்களின் முழுமையான அன்பை பெற்றவர். அந்த ஜீவா-வால் பாதிக்கப்பட்ட உள்ளூர் அரசியல்வாதி சினிமா பாணியிலான வழக்கமான் ஏற்பாட்டில் ஜீவாவை கொலை செய்ய வருகிறார் சென்னை ரவுடி நவ்தீப். ஆனால்  ஜீவாவை கொல்ல வந்த இடத்தில் அவன்  தங்கை பிரசவ வலியில் இருப்பதைக் கண்டு மனம் மாறி ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்து விட்டு எஸ்கேப் ஆகி விடுகிறான். இப்படி தன்னை கொலை செய்ய வந்தவன் உயிருக்கும் மேலான தங்கையை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக, அவனை நேரில் சந்திக்கிறான் ஜீவா .. அதன் பின் நடப்பதுதான் சீறு திரைக்கதை. கூடவே இந்த சீறு என்ற டைட்டிலை நிரூபிக்க ஆங்காங்கே நட்பு, கல்வி, கனவு, அரசியல், நாட்டு நடப்பு, பெண்ணின் ஏக்கம் என்று கிளைச் சமாச்சாரங்கள் துளிர் விட்டு ஸ்மைலி சிம்பலை காட்டுவதுதான் ஹைலைட்.

இந்த படத்தில் ஹீரோவாக  நடிகர் ஜீவா நடித்திருக்கிறார். ஆனால் திருப்பாச்சி படத்தில் விஜய் வந்தது போலவே இருக்கிறார்.அதே உருவ ஒற்றுமையுடன், அதே டைப்பில் தங்கையை பாசமாக கவனித்து கொள்வதும், தப்பைக் கண்டால் ஆக்ரோஷமாக அடித்து துவைப்பதிலும் அதே பொறி பறந்த திருப்பாச்சி விஜய்-யை கண் முன் நிறுத்துகிறார். கொஞ்சம் மாற்றி யோசித்து நடிப்பை வழங்கி இருக்கலாம் தம்பி ஜீவா.

அதே சமயம் சீறும் ரவுடியாக நவ்தீப் நடித்திருக்கிறார் என்பதை வாழ்ந்திருக்கிறார்.. தான் நல்ல எதிர்காலம் கொண்ட நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். ரியா சுமன் நாயகியாம்..அழகு பொம்மை யான இவருக்கு காட்சிகள் கொஞ்சம்தான் என்பதால் ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்குகிறார் .

மாயவரத்தின் அழகையும், வட சென்னையின் இன்னொரு முகஹ்தையும் அற்புதமாக படம் பிடித்திருக்கும் பிரசன்னா குமார் அளவுக்கு இமான் மெனக்கெடவில்லை.

அது போல் இந்த சீறு படத்துக்காக இயக்குநர் ரத்தினசிவா-வும் பெரிசாக அலட்டிக் கொள்ளாமல் ஒரு ப்ளஸ் டூ மாணவியின் பேட்டியால் பிரளயமே – அதுவும் ஸ்டேட் & டிஸ்டிரிக் டாப்பர் லிஸ்ட் குறித்து அறிவிக்க தடை வந்தே சில வருடங்கள் ஆன நிலையில் கொண்டு போயிருக்கும் கதை எல்லாம் கொஞ்சமும் எடுபடவில்லை..

ஆனாலும் முன்னரே சொன்னது போல் தவறான பாதையில் போ ய் சூப்பர் ஹிட் என்று பிட் நோட்டீஸ் – அதுவும் ட்விட்டரில் ஒட்டும் சினிமா உலகில் சமூக அக்கறை உள்ள விஷயங்களை சொல்ல முயன்றிருக்கும் போக்குக்கு டைரக்டர் ரத்னசிவா & வேல்ஸ் பிலிம்ஸூக்கும் ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.

மொத்தத்தில் இந்த சீறு என்பது ஒரு கோபக்காரனின் குரலல்ல..

அநீதி கண்டு வெகுண்டெழும் பெண்களின் கோரஸ்!

மார்க் 3 / 5

error: Content is protected !!