மத்திய அரசு தடை செய்த சாரிடான் உள்ளிட்ட மாத்திரிகைகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

மத்திய அரசு தடை செய்த சாரிடான் உள்ளிட்ட மாத்திரிகைகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

நம் நாட்டில் பெரும்பாலானோரால் உபயோகிக்கப்படும் சாரிடான், டார்ட் வலி நிவாரணி, பிரிட்டான் உள்ளிட்ட மருந்துப் பொருட்களை விற்பனை செய்யலாம் என்று  சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

சாரிடான் போன்ற மாத்திரைகள், எப்.டி.சி. எனப்படும் பிக்சட் டோஸ் காம்பினேஷன் முறையில் தயாரிக்கப்படுகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் , குறிப்பிட்ட அளவில் இவற்றில் இடம்பெற்றிருக்கும். இதனால், இத்தகைய எப்.டி.சி. மருந்துகள் வலிகளில் இருந்து உண்மையாக நிவாரணம் அளிப்பதில்லை என்றும், போலி மருத்துவர்கள் அவற்றைப் பரிந்துரைப் பதால் அவை பாதுகாப்பானவை அல்ல என்றும் கூறி, கடந்த 2016ஆம் ஆண்டில் 344 வகை எப்.டி.சி. மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதை எதிர்த்து பல்வேறு  ஐகோர்ட்டுகளிலும் , சுப்ரீம் கோர்ட்டிலும் மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த  சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக அறி்க்கை அளிக்குமாறு மத்திய மருந்துப் பொருள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், 16 மருந்துப் பொருட்களைத் தவிர்த்து மற்ற 328 மருந்துப் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. சாரிடான், பான்டெர்ம் பிளஸ் கிரீம், டேக்சிம் ஏஇசட், நீரிழிவு நோய்க்கான குளுக்கோநார்ம் பிஜி உள்ளிட்ட 328 வகைகளை சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட வலி நிவாரணிகள், தோல் சிகிச்சை மருந்துகளை உற்பத்தி செய்ய மற்றும் விற்பனை செய்யக் கூடாது என்று தெரிவித்தது சுப்ரீம் கோர்ட்.

அதே சமயம் இது தொடர்பாக மருத்துவ நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை இன்று (செப்டம்பர் 17) விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட். அப்போது சாரிடான், டார்ட் வலி நிவாரணி, பிரிட்டான் உள்ளிட்ட மருந்துப் பொருட்களின் மீதான தடையை நீக்கி, அவற்றை விற்பனை செய்யலாம் என்று அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது!.

error: Content is protected !!