சவுதியில் மன்னரின் சகோதரர் உள்பட அரச குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சவுதி அரேபியாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு உள்ளன. மெக்கா உள்ளிட்ட புனித தலங்களுக்கு மக்கள் அதிகளவில் சென்று தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சவுதி அரசர் சல்மானுக்கு எதிராக ஆட்சியை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டியதாக அரச குடும்பத்தை சேர்ந்த 3 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மேலும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக கடந்த 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது முதல், முகமது பின் சல்மான் முடிசூடா மன்னர் போல் செயல்பட்டு வருகிறார். தனக்கும், தனது அதிகாரத்துக்கும் எதிராக குரல் கொடுப்பவர்களை சிறை பிடிப்பதை சவுதி பட்டத்து இளவரசர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், சவுதி மன்னர் சல்மானின் இளைய சகோதரர் இளவரசர் அகமது பின் அப்துல் அஸிஸ், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் நவாஃப் பின் நயீப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இந்த கைதுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Related Posts

error: Content is protected !!